Home /News /entertainment /

இவ்வளவு நாள் எடுத்த ஓய்வு போதுமாம்.. மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் வெண்பா!

இவ்வளவு நாள் எடுத்த ஓய்வு போதுமாம்.. மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் வெண்பா!

பாரதி கண்ணம்மா வெண்பா

பாரதி கண்ணம்மா வெண்பா

பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை ஃபரினா ஆசாத் போதிய ஓய்விற்கு பிறகு மீண்டும் பாரதி கண்ணம்மாவிற்கு வெண்பாவாக திரும்பி வந்துள்ளார்.

    சின்னத்திரை ரசிகர்களை டிவி முன் உட்கார வைப்பதில் சீரியல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. விறுவிறுப்பான மற்றும் சுவாரசியம் குறையாத சீரியல்களை டெலிகாஸ்ட் செய்வதில் முன்னணியில் இருக்கும் பல பிரபல சேனல்கள் தீவிரம் காட்டி வருகின்றன. பல வகையான ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் கூட இன்று வரை சீரியல்களை அடித்து கொள்ள முடியவில்லை. பிரபல சேனல்கள் அனைத்திலுமே நாளொன்றுக்கு சராசரியாக 10 முதல் 15 சீரியல்கள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருவதே இதற்கு சான்று. பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள ஸ்டார் விஜய் டிவி-யிலும் எண்ணற்ற சீரியல்கள் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

    மாலை முதல் இரவு வரை ப்ரைம் டைமிங்கில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மூலம் தான் சேனலின் TRP ரேட்டிங் எகிறும் என்பதால் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் இந்த நேரத்தில் தான் டெலிகாஸ்ட் செய்ப்படுகின்றன. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சின்னத்திரை ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள சீரியலாக இருந்து கொண்டிருக்கிறது. கண்ணம்மாவாக நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் திடீரென்று சீரியலை விட்டு விலகியதால், அவருக்கு பதில் வினுஷா தேவி என்பவர் கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

    இந்த சீரியலில் பிரதான வில்லியாக வெண்பா என்ற ரோலில் நடித்து வருபவர் நடிகை ஃபரினா ஆசாத். சின்னத்திரையில் முதன்முதலாக குக்கிங் ஷோ ஒன்றின் மூலம் அறிமுகமாகி , அதன் பிறகு படிப்படியாக வளர்ந்து சீரியலுக்குள் நுழைந்தவர் நடிகை ஃபரீனா. இவர் நிஜ வாழ்வில் கர்ப்பிணியாக இருந்ததால் ஜெயிலுக்கு போவது போல காட்சிகள் காட்டப்பட்டது. இந்த நேரத்தில் தான் ரோஷினி விலகி வினுஷா வந்தார். இந்த சீரியலில் கண்ணம்மா ரோல் எந்த அளவுக்கு பிரபலமோ, அதே அளவிற்கு வெண்பா ரோலும் பிரபலம். அந்த அளவிற்கு வில்லத்தனத்தில் மிரட்டி வருபவர் நடிகை ஃபரினா. ரோஷினி மற்றும் ஃபரினா இன்றி ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சில நாட்களுக்கு ரசிகர்களை கவர தவறினாலும், அச்சு அசலாக பழைய கண்ணம்மாவை போலவே புதிய கண்ணம்மா வினுஷா நடித்து வருவதால் மீண்டும் ரசிகர்கள் சீரியலை பார்க்க துவங்கினர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை ஃபரினா ஆசாத் போதிய ஓய்விற்கு பிறகு மீண்டும் பாரதி கண்ணம்மாவிற்கு வெண்பாவாக திரும்பி வந்துள்ளார். சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் டாகடர் வெண்பா கெட்டப்பில் நடிகை ஃபரினா இருக்கும் ஃபோட்டோ சோஷியல் மீடியாக்களில் ஷேராகி வருகிறது. மீண்டும் சீரியலுக்கு திரும்பி இருக்கும் ஃபரினாவை வரவேற்று அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி