Home /News /entertainment /

அந்த காரணத்தினால் தான் உனக்கு டைவர்ஸ் கொடுக்கல.. உண்மையை உளறிய பாரதி!

அந்த காரணத்தினால் தான் உனக்கு டைவர்ஸ் கொடுக்கல.. உண்மையை உளறிய பாரதி!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

லட்சுமியும் ஹேமாவும் பாரதி - கண்ணம்மாவின் குழந்தை தான் என்பது பாரதிக்கு இன்னும் தெரியாது.

    பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடில் ஹேமாவிடம் உங்க அம்மாவுக்கு டைவர்ஸ் தர மாட்டேன் என்று பாரதி சத்தியம் செய்து விடுகிறார். இதற்கு நன்றி சொன்ன கண்ணம்மாவிடம் வேற ஒரு காரணத்தையும் பாரதி கூறுகிறார்.

    பாரதி - கண்ணம்மா விஷயம் முடியாத ஒன்று. ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தால் முடிய வேண்டிய சீரியலை இன்னும் முடிக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார் இயக்குனர். ஆரம்பத்தில் கதை மிகவும் சுவாரசியமாக இருந்ததால் ரசிகர்கள் கண்களுக்கு குறை தெரியவில்லை. ஆனால் இப்போது கதை உப்பு சப்பு இல்லாமல் செல்வதால் ரசிகர்கள் சீரியலை முடிக்கும் படி சொல்கின்றனர். ஆனால் அதன் முடிவு இயக்குனர் கையில் தான். இன்றைய எபிசோடில் கண்ணம்மா - பாரதி டைவர்ஸ் விவகாரம் கடைசியில் முடிவுக்கு வந்து விட்டது.

    COOK WITH COMALI : இந்த வார எபிசோடில் குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்!

    ஹேமா பாரதியிடம் அடம்பிடிக்க, குழந்தைக்காக டைவர்ஸ் வேண்டாம் என்று முடிவு எடுத்து விடுகிறார் பாரதி. பாரதி டைவர்ஸ் கொடுக்க போவது கண்ணம்மாவுக்கு தான் என்பது ஹேமாவுக்கு தெரியாது. தனது அம்மா இன்னும் உயிருடன் இருக்கிறார், அவருக்கு தான் பாரதி அப்பா டைவர்ஸ் கொடுக்கிறார் என ஹேமா நினைத்துக் கொண்டிருக்கிறார். அவரை தவிர மற்ற அனைவருக்கும் உண்மை தெரியும் என்பதால் பாரதி டைவர்ஸ் இல்லை என்று சொன்னதும் அனைவரும் ஹாப்பி. குறிப்பாக லட்சுமிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இதனைத் தொடர்ந்து பாரதியிடம் பேசும் கண்ணம்மா, டைவர்ஸ் தராமல் போனதற்கு நன்றி என்கிறார். உடனே பாரதி புது காரணத்தை கொடுக்கிறார்.

    கணவன் - மனைவி இனி ஒரே சேனலில்... ஷபானா - ஆர்யன் ஃபேன்ஸ் பயங்கர ஹேப்பி!

    அதாவது, ஒருவேளை ஹேமாவின் பேச்சை மீறி நான் உனக்கு டைவர்ஸ் கொடுத்தால் அவள், தனது அம்மா பற்றி தேட ஆரம்பித்து விடுவாள். நான் டைவர்ஸ் கொடுத்தது உனக்கு என தெரிந்தால் கடைசியில் உன்னை அவளின் அம்மா என நினைத்து விடுவாள். அது உண்மையில்லை , அதே போல் ஹேமாவுக்கு தான் வளர்ப்பு குழந்தை என தெரிந்து விடும் என பாரதி மற்றொரு காரணத்தை சொல்ல கண்ணம்மாவுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

    இரண்டுமே பாரதி - கண்ணம்மாவின் குழந்தை தான் என்பது பாரதிக்கு இன்னும் தெரியாது. (அது தெரிந்து இருந்தால் சீரியல் முடிந்து இருக்குமே) பாரதி எடுத்த முடிவை பற்றி, அவரின் லாயர் வெண்பாவுக்கு ஃபோன் செய்து சொல்கிறார்,. வெண்பாவுக்கு அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. கோபத்தில் பாரதிக்கு ஃபேன் செய்கிறார். ஆனால் ஹேமா ஃபோனை எடுக்க வழக்கம் போல் வெண்பா டென்ஷன் ஆகிறார். கடைசியில் வெண்பாவின் திருமணத்திற்கு ஹேமா வாழ்த்து சொல்லி ஃபோனை கட் செய்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி