Home /News /entertainment /

டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமலே உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா... நம்ப முடியாத ட்விஸ்ட்!

டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமலே உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா... நம்ப முடியாத ட்விஸ்ட்!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடில் இதுகுறித்து லட்சுமி, சவுந்தர்யாவுக்கு ஃபோன் செய்து சொல்கிறாள்.

    பாரதி கண்ணம்மா சீரியலில் உண்மயை சொல்ல போவதாக கண்ணம்மா எடுத்திருக்கும் திடீர் முடிவு சீரியலை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. அதுமட்டுமில்லை அடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடம் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    விஜய் டிவியின் நம்பர் ஒன் டிஆர்பி சீரியல் ஆன பாரதி கண்ணம்மா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக மறைக்கப்பட உண்மையை சொல்ல தயாராகிறார் கண்ணம்மா. இந்த எபிசோடுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பல ஆண்டுகளாக "ஜவ்வு" போல இழுத்து அடிக்கும் ஒரு மேட்டர் இந்த வாரம் முடிந்து விடும் என்பது போல் தெரிகிறது. அந்த வகையில் ரசிகர்கள் பிளஸ் நெட்டிசன்கள் அனைவருக்கும் சந்தோஷம் தான்.

    இதையும் படிங்க.. கல்யாணத்தை பற்றி பேசிய யாஷிகா ஆனந்த்.. நிரூப் அவருக்கு என்ன உறவு தெரியுமா?

    அதாவது கண்ணம்மாவின் கணவர், லக்ஷ்மியின் அப்பா யார் என்கிற உண்மை அடுத்த வார எபிசோட்களில் அம்பலப்படுத்தப்படும் என்பது போல் தெரிகிறது. இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், இந்த உண்மையை வெளிப்படுத்தப்போவது கண்ணம்மாவின் மாமியாரோ, டிஏன்.ஏ சான்றிதழோ அல்ல. நம்ம கண்ணம்மாவே தான். சமீபத்தில் விசேஷம் ஒன்றில் கலந்து கொண்ட கண்ணம்மா அங்கிருந்த பெரியவர் ஒருவரால அசிங்கப்படுத்தப்படுகிறாள்.

    "இன்னும் 4 நாட்களில் என் பிறந்த நாள் நிகழ்ச்சி நடக்க உள்ளது, அப்போது யார் லக்ஷ்மியின் அப்பா என்பதை நான் சொல்கிறேன்” என்று பலத்த குரலில் கண்ணம்மா பதில் சொல்ல, லட்சுமிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. இத்தனை ஆண்டுகளாக ஆப்பாவை பார்க்காமல் வளரும் லட்சுமிக்கு, கண்ணம்மா தனது பிறந்த நாள் அன்று உண்மையை சொல்ல போகிறார்.

    இதையும் படிங்க.. பிக் பாஸ் 5 வீட்டில் நடந்தது இதுதான்.. சிபி, அமீர், பாவ்னி பற்றி புட்டு புட்டு வைக்கும் ராஜூ!

    அதுமட்டுமில்லை, இன்றைய எபிசோடில் இதுக் குறித்து லட்சுமி, சவுந்தர்யாவுக்கு ஃபோன் செய்து சொல்கிறாள். கூடவே, கண்ணம்மாவின் பிறந்த நாள் விழாவுக்கு டாக்டர் பாரதியையும் அழைத்து வர சொல்கிறாள். இந்த விஷயத்தை பாரதியிடம் போய் ஹேமா சொல்ல, உடனே ஷாக் மோடுக்கு செல்கிறார் பாரதி. அடுத்த வாரம், ஊரை கூட்டி கண்ணம்மா எந்த உண்மையை சொல்ல போகிறார் என ஒருபக்கம் பாரதிக்கு பயம் தாங்கல.. இந்த பக்கம் ரசிகர்களுக்கு ஆர்வம் தாங்கல.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி