Home /News /entertainment /

பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் விவாகரத்து.. கண்ணீர் விடும் லட்சுமி!

பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் விவாகரத்து.. கண்ணீர் விடும் லட்சுமி!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

எப்படியாவது பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க வேண்டும் என கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்.

    பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவை விவாகரத்து செய்வதில் உறுதியாக நிற்கிறார் டாக்டர் பாரதி. இந்த விஷயம் தெரிந்து குழந்தை லட்சுமி கண்ணீர் விடுகிறார்.

    பாரதி கண்ணம்மா சீரியலில் அப்பா - அம்மா பிரிய போவதை நினைத்து கண்ணீர் விடுகிறார் சவுந்தர்ய லட்சுமி. ஒரு குழந்தை தனது அப்பாவை, அப்பா என பெயர் வைத்து கூப்பிட முடியவில்லை என்ற ஏக்கம் லட்சுமிக்கு இருக்கிறது. ஸ்கூலில் நடந்த ஆண்டு விழாவில் ஹேமா, பாரதியை அப்பா, அப்பா என கூப்பிட்டு பேசியது லட்சுமிக்கு இன்னும் சோகத்தை தந்தது. கடைசியில் ஹேமா பாரதியின்  2வது திருமணம் பற்றி மேடையில் பேச, லட்சுமி அதை மறந்து விடுகிறார். ஆனால் ஹேமா பேசியதில் பாரதிக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை.

    கர்ணன் படத்தை மிஞ்சிய தனுஷின் நானே வருவேன் டிஜிட்டல் விற்பனை

    அவரே எப்படி, கண்ணம்மாவை டைவர்ஸ் செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில், ஹேமா பேசியது எல்லாமே அவருடைய குடும்பத்தார் சொல்லி கொடுத்து தான் என் நினைத்து சந்தேகம் கொள்கிறார் .வழக்கம் போல் சவுந்தர்யாவிடம் சண்டையும் போடுகிறார். ஆனால் லட்சுமிக்கு பாரதி,  கண்ணம்மாவுக்கு  விவாகரத்து வழங்க போகும் விஷயம் ஏற்கெனவே தெரிந்து விட்டது. இதனால் அப்பாவை சட்டப்படி பிரிய போகிறோம் என நினைத்து வருந்துகிறர் லட்சுமி.

    ஹேமாவிடம் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் கல்யாணம் செய்து வைக்கலாமா? எனவும் கேட்கிறார். ஆனால் பாரதி அப்பா முடிவு இதில் முக்கியம் என்கிறார் ஹேமா. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடில் மீண்டும் பாரதி - கண்ணம்மா விவாகரத்து கேஸ் விசாரணைக்கு வருகிறது. இதை சவுந்தர்யா பாரதியிடம் சொல்கிறார். சந்தோஷத்தில் பாரதி, இதற்கு தான் வெயிட்டிங் சீக்கிரமாக கண்ணம்மாவை சட்டப்படி பிரிய போகிறேன் என இடியை தூக்கி போடுகிறார்.

    ஸ்பைடர்மேன், எக்ஸ்-மேன்களுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கொடுத்தது யார் தெரியுமா?

    இந்த பக்கம் லட்சுமி எப்படியாவது பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க வேண்டும் என கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி