Home /News /entertainment /

இதுக்கு மேல யாருக்கும் பொறுமை இல்ல.. அந்த கதைக்கு முடிவு கட்டிய பாரதி கண்ணம்மா இயக்குனர்!

இதுக்கு மேல யாருக்கும் பொறுமை இல்ல.. அந்த கதைக்கு முடிவு கட்டிய பாரதி கண்ணம்மா இயக்குனர்!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

இந்த வாரத்துடன் பாரதி கண்ணம்மா தீவிரவாதிகள் ஹைஜேக் எபிசோடு முடிவுக்கு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாரதி கண்ணம்மா சீரியலில் ஒருவழியாக தீவிரவாதிகளின் ஹைஜேக் எபிசோடு முடிவுக்கு வருகிறது. இதுக்கு மேல பார்க்க  யாருக்கும் பொறுமை இல்ல என்பது இயக்குனருக்கு தெரிந்து விட்டது போல.

    பாரதி கண்ணம்மா சீரியலில் இப்போது டாக்ர பாரதி - கண்ணம்மா வேலை பார்த்து வந்த ஆஸ்பிட்டல் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்கள் மத்திய அமைச்சரின் உயிரை பணயம் வைத்து டாக்டர்கள், பொதுமக்கள், நர்ஸ்களை பிடித்து வைத்துள்ளனர். கடந்த 2 வாரமாக  இதே திரைக்கதையை சீரியலில் பார்த்து ரசிகர்கள் பொறுமை இழந்து விட்டனர். இதை முடித்தால் போதும் என்ற அளவுக்கு ரசிகர்கள் வந்து விட்டனர். இந்நிலையில் இந்த வாரத்துடன் இந்த ஸ்டோரி முடிவுக்கு வருகிறது.

    மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் இருந்து கிளம்பிய ஜோடி.. ரசிகர்கள் வருத்தம்!

    ஏற்கெனவே நேற்றைய எபிசோடில் கண்ணம்மா முதல் தீவிரவாதியை கத்திரியால் குத்தி கொலை செய்யும் அளவுக்கு சென்று விட்டார். இந்நிலையில் இப்போது ஹீரோ பாரதி விழித்து கொண்டார். அகிலனுடன் சேர்ந்து எல்லா தீவிரவாதிகளையும் அடித்து தும்சம் செய்கிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. பாரதி - அகிலன் இருவரும் பிளான் செய்து தீவிரவாதிகளை அடித்து அவர்களுக்கு மயக்க ஊசி போடுகின்றனர்.

    இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. ஒரே படத்தில் அறிமுகமாகும் சீரியல் நடிகைகள்!



    ரூமில் இருக்கும் கண்ணம்மா மற்றும் அஞ்சலி, நர்ஸ்கள் விடுதலையாக காத்திருக்கின்றனர். இவர்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டனர். ஆக்‌ஷன் மூவி அளவுக்கு ஸ்டண்ட் காட்சிகள் காட்டப்பட்டு வருகின்றன. சிலருக்கு இந்த ஸ்டோரி பிடித்து இருந்தாலும் கூட பலரும் போர்  அடிப்பதாக இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகள் தயவு செய்து இந்த ஸ்டோரிக்கு முடிவு கட்டி விட்டு அடுத்த கதைக்கு செல்லுமாறு புலம்பி வருகின்றனர். இது இயக்குனர் காதுக்கு கேட்டு விட்டது போல இந்த வாரத்துடன் தீவிரவாதிகள் ஹைஜேக் எபிசோடு முடிவுக்கு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி