Home /News /entertainment /

லட்சுமியை கட்டிப்பிடித்து கதறி அழும் பாரதி! ஒருவேளை உண்மை தெரிந்திருக்குமோ?

லட்சுமியை கட்டிப்பிடித்து கதறி அழும் பாரதி! ஒருவேளை உண்மை தெரிந்திருக்குமோ?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் லட்சுமிக்கு பாரதி தான் அப்பா என்ற உண்மை தெரிந்து விட்டது.

    பாரதி கண்ணம்மாவில் ஆபத்தில் இருக்கும் லட்சுமியின் உயிரை காப்பாற்றுகிறார் பாரதி. அதுமட்டுமில்லை ஒரு பாசத்தில் தன்னை அறியாமல் லட்சுமியை கட்டிப்பிடித்து துடிக்கிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சீரியலிலேயே பாரதி கண்ணம்மா தான் ஒருகாலத்தில் நெம்பர் ஒன் டிஆர்பியுடன் பட்டையைக் கிளப்பி வந்தது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த  பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் பேவரைட் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு டப் போட்டியாளராக பாரதி கண்ணம்மா சீரியல் மட்டும் தான் இருந்தது. ஆனால் இன்று கதையே வேற. தற்போது சீரியல் டி.ஆர்.பி முதல் 5 இடங்களை கூட பிடிப்பதில்லை. ஆனாலும் இயக்குனர் வலிமையுடன் இந்த சீரியலை எடுத்து வருகிறார். குறிப்பாக இந்த சீரியலின் புரமோ வீடியோவில் பாரதி கண்ணம்மாவை சுபம் போட்டு முடிக்க சொல்லி ரசிகர்கள் பலர் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க.. ஸ்ருதிக்கு 15 கொடுத்த பிக் பாஸ்

    தற்போது சீரியல் கதைக்களம் முழுக்க முழுக்க குழந்தைகளை முன் வைத்து சென்று கொண்டிருக்கிறது. லட்சுமிக்கு பாரதி தான் அப்பா என்ற உண்மை தெரிந்து விட்டது. தனியாக நின்று இந்த உண்மையை லட்சுமி கண்டுப்பிடித்து விட்டாள். அதுமட்டுமில்லை, இப்போது ஸ்கூல் டூரில் பாரதி - கண்ணம்மா இருவரையும் குழந்தைகள் அழைத்து வந்துள்ளனர். எப்படியாவது இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும்  என்ற முடிவில் லட்சுமி இருக்கிறாள்.

    சரஸ்வதிக்கு குடும்பத்தால் வரும் புது பிரச்சனை.. செம்ம கோபத்தில் தமிழின் அம்மா கோதை!

    இந்த நேரம் பார்த்து தான் ஸ்கூல் டூரில் நீச்சல் குளத்தில் குளிக்கும் லட்சுமி நீச்சல் தெரியாமல் மாட்டிக் கொள்கிறாள். பதறிப்போன பாரதி துடித்து போய் குழந்தையை காப்பாற்றுகிறார். லட்சுமிக்கு என்ன ஆனது என தெரியாமல் ஒருபக்கம் கண்ணம்மாவும் ஹேமாவும் அழுகிறார்கள். உடனே பாரதி லட்சுமிக்கு முதலுதவி செய்து பிழைக்க வைக்கிறார். பயந்து போன லட்சுமி, கண் விழித்ததும் பாரதிக்கு நன்றி சொல்லிவிட்டு டாக்டர் அப்பா என்கிறார்.



    துடித்து போன பாரதி தன்னை அறியாமல் லட்சுமியை கட்டிப்பிடித்து கதறி அழுகிறார். இந்த புரமோ வீடியோ பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி