பாரதி கண்ணம்மா சீரியல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
கதைப்படி கண்ணம்மா கர்ப்பமாக இருக்கும் போது அவள் மீது சந்தேகப்பட்டு, பாரதி வீட்டை விட்டு அனுப்பி விட்டான். இதற்கு முழு காரணமும் வில்லி வெண்பா தான். வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மாவுக்கு 2 பெண் குழந்தைகள் பிறக்கிறது. அதில் லட்சுமி கண்ணம்மாவுடன் வளர, மற்றொரு மகள் ஹேமா, பாரதியிடம் இருக்கிறார். ஹேமா தனது நிஜமான குழந்தை என்பது பாரதிக்கு தெரியாது. ஆனால் லட்சுமிக்கு எல்லா உண்மையும் தெரியும். கண்ணம்மா எத்தனையோ முறை கெஞ்சி கேட்டும் டி.என்.ஏ டெஸ்ட் எடுக்காத பாரதி ஒருவழியாக அதையும் எடுத்து, உண்மையை தெரிந்துக் கொள்கிறான்.
ஹேமாவும், லட்சுமியும் தனது குழந்தைகள் தான் என்பதை ஏற்றுக் கொண்ட பாரதி, தவறை உணர்ந்து கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறான். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத அவள், குழந்தைகளோடு கிராமத்துக்கு சென்று விடுகிறாள். அவளை தேடிச் சென்று சமதானப்படுத்த முயன்ற பாரதிக்கு தோல்வியே மிஞ்சுகிறது. கண்ணம்மா விருப்பத்தின் பேரில் அவளுக்கு விவாகரத்தும் தருகிறான் பாரதி.
எம்.ஜி.ஆர் உருவத்தை பச்சைக் குத்திய விஷால்... அரசியலுக்கு வரும் அறிகுறியா?
தற்போது அவனுக்கு தலையில் அடிப்பட்டு நினைவிழந்து இருக்கிறான். இதனால் கண்ணாம்மா மூலம் பழைய நினைவுகளை மீட்டெடுக்க முயற்சித்து வருகின்றனர். இதனால் பாவடை தாவணியில் ‘பாரதி காதலியே கண்ணம்மா, கண்ணம்மா’ என்ற பாடலை பாடிக்கொண்டு பழையபடி வருகிறார் கண்ணம்மா. இதற்கிடையே நியூயார்க்கில் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில், மருத்துவ மேற்படிப்பு படிக்க பாரதிக்கு வாய்ப்பு வருகிறது. ஆனால் இதற்கு பாரதி முழுமையாக குணமடைய வேண்டும். கண்ணம்மாவின் உதவியால் பழைய நிலைக்கு திரும்பும் பாரதி, தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைந்ததும் சீரியல் முடியும் எனத் தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv