Home /News /entertainment /

பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் இதுவா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் இதுவா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா தொடரில் திடீர் மாற்றமாக சீரியலின் திரைக்கதை வேகமாக செல்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் கூடிய விரைவில் முடியவுள்ளதா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. அதற்கு காரணம் யூடியூப்பில் வெளியாகி இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலின் புரமோ.

    ரசிகர்கள் பாரதி கண்ணம்மா தொடரை விரைவில் முடிக்கும்படி தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருவது இணையவாசிகள் அனைவருக்கும் தெரியும். ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தால் முடிய வேண்டிய சீரியலை கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கடத்தி விட்டார் இயக்குனர். அது கூட ஓகே என்றாலும் சீரியலில் நடித்த நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து விலகியது சீரியலுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. சீரியலில் இருந்து ரோஷினி விலகிய பிறகு அவரை போலவே இருக்கும் வினுஷா தேவியை புதிய கண்ணம்மாவாக களமிறங்கியது சீரியல் குழு. இருப்பினும் இந்த சீரியல் சமீப காலமாக ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.



    8 வருடமாக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு உதவி செய்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன்!

    கடந்த 2 வாரமாக ஒளிப்பரப்பாகிய தீவிரவாதிகள் எபிசோடு ஒருவழியாக முடிவுக்கு வந்தது. பாரதி, கண்ணம்மா, லட்சுமி ஹேமா, அகிலன், அஞ்சலி என எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். இந்நிலையில் பாரதி கண்ணம்மா தொடரில் திடீர் மாற்றமாக சீரியலின் திரைக்கதை வேகமாக செல்கிறது. ஒரே வீட்டில் இப்போது கண்ணம்மா, பாரதி இருக்கிறார்கள். பாரதியும் கண்ணம்மாவிடம் சென்று மன்னிப்பு கேட்கிறார். நன்றியும் சொல்கிறார்.



    எல்லோரும் ஒரே நேரத்தில் சமைத்து சாப்பிடுகிறார்கள். இங்கு வெண்பா இதை நினைத்து நினைத்து கோபத்தில் கொதிக்கிறார்.வெண்பாவுக்கு ஒருபக்கம் கல்யாண ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. பாரதி பற்றிய உண்மை லட்சுமிக்கு தெரிந்து விட்டது. லட்சுமிக்கு எல்லா விஷயமும் தெரியும் என்பது பாரதிக்கு தெரிந்து விட்டது. ஹேமா பற்றிய உண்மையும் பாரதிக்கு தெரிந்து விட்டது.

    ஆல்யா ரொம்ப ரொம்ப லக்கி...புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் கூட்டம்! என்ன விஷயம்?

    எனவே பாரதி கடைசியாக டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தால் போதும் மொத்த பிரச்சனைக்கும் முடிவு தெரிந்து விடும். அதே  போல் கூடிய விரைவில் விஜய் டிவியில் புத்தம் புதிய சீரியலும் டெலிகாஸ்ட் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே பாரதி கண்ணம்மா தொடர் விரைவில் முடிக்கப்படலாம் என ரசிகர்கள் நினைக்கின்றனர். ஆனால் இயக்குனர் முடிவு என்ன? என்பது யாருக்கும் தெரியாது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி