• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • ”கண்ணம்மா என் பொண்டாட்டி தான்”.. வெண்பாவுக்கு ஷாக் கொடுக்கும் பாரதி!

”கண்ணம்மா என் பொண்டாட்டி தான்”.. வெண்பாவுக்கு ஷாக் கொடுக்கும் பாரதி!

பாரதி கண்ணம்மா பாரதி

பாரதி கண்ணம்மா பாரதி

எங்கள் பிரச்சனை நடுவில் மூன்றாவது மனிதர்கள் வருவதை நாங்கள் விரும்பவில்லை என்று வெண்பாவிற்கு பாரதி பதில் கூறுகிறான்.

 • Share this:
  சின்னத்திரையில் முக்கிய சேனலாக இருந்து வரும் விஜய் டிவி-யில் ஓடி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

  இரவு 9 - 9.30 மணி வரை இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்றாலும் ஹாட்ஸ்டாரின் விஐபி மெம்பர்களுக்காக காலை 6 மணி முதலே இன்றைய எபிசோட் முழுவதும் கிடைக்கும். அந்த வகையில் இன்றைய எபிசோடின் கதை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நேற்று பாரதியின் வீட்டிற்கு வரும் கண்ணம்மா ஹேமா மற்றும் அங்கிருக்கும் குடும்ப உறுப்பினர்களுடன் சகஜமாக உரையாடுவது, பின் ஹேமாவிற்கு சாப்பாடு ஊட்டிவிடுவதை போலவும், வெண்பா பாரதியின் வீட்டிற்கு புறப்பட்டு வருவதயும் போல காட்சிகள் காட்டப்பட்டு முடிக்கப்பட்டது. தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் ஹேமாவிற்கு சாப்பாடு ஊட்டிவிடும் கண்ணம்மா மற்றும் அவளுக்கு ஆதரவாக இருக்கும் குடும்ப உறுப்பினர்களை மகள் ஹேமா முன் எதுவும் சொல்ல முடியாமல் பாரதி தவிக்கிறார்.

  ஹேமாவின் வற்புறுத்தலால் நாற்காலியில் அமரும் பாரதியிடம் கண்ணம்மா சமைத்து எடுத்து வந்த உணவை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்துகிறாள் ஹேமா. பாரதி தொடர்ந்து சாப்பிட மறுக்க அவரை விட்டுவிடுமாறு சொல்கிறார் கண்ணம்மா. பின்னர் அங்கு வரும் வெண்பா ,பாரதி அருகே அமர்ந்திருக்க, ஹேமாவிற்கு கண்ணம்மா சாப்பாடு ஊட்டி விடும் கட்சியை பார்த்து நிற்கிறாள். அவளை பார்த்து விடும் கண்ணம்மா, உங்க ஃபிரெண்ட் வந்திருக்காங்க பாருங்க என்று ஒரே நேரத்தில் பாரதி மற்றும் வெண்பாவை வெறுப்பேற்றுகிறார்.

  வாங்க வெண்பா உட்காருங்க என்று கூறி அவளை நலம் விசாரிப்பது, ஸ்வீட் சாப்பிடுங்க என்று கூறி கலாய்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார் கண்ணம்மா. போதாத குறைக்கு பாரதியின் தாய் சௌந்தர்யாவும் வெண்பாவை கலாய்க்க பாரதி வா வெண்பா ஹாஸ்பிடல் கிளம்பலாம் என்று சொல்லி அவளை அழைத்து சென்று விடுகிறார்.வெளியே சென்ற பின்னர் பாரதியிடம் வெண்பா சரமாரியாக கேள்விகளை கேட்கிறாள். உன் மனதிலும் கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டதாக கூறி பேசி கொண்டே போகிறாள் வெண்பா. ஒரு கட்டத்தில் பொறுமையிழக்கும் பாரதி, என்ன நடந்தது என்று தெரியாமல் இஷ்டத்திற்கு பேசாதே என்று கூறுகிறார்.

  ஆனால் அதை காதில் வாங்காத வெண்பா, தொடர்ந்து கோபத்தில் பேசி கொண்டே செல்ல, கடுப்பாகும் பாரதி, நான் தாலி கட்டிய பொண்டாட்டியான கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழும் போது கூட நம் நட்பை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை தவறாக பேசியதில்லை. ஆனால் நீ இப்படி பேசிக்கொண்டே இருக்கிறாயே, உனக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது என்று எதிர் கேள்வி கேட்க அதிர்கிறாள் வெண்பா. யாரை பற்றியும் இதுவரை கண்ணம்மா தவறாக பேசியதில்லை என்று குத்தி காட்டுகிறான்.

  எல்லா தப்பும் நடக்குற வீடு பாண்டியன் ஸ்டோர்ஸ் தான்... வெடிக்கும் மீனா! காரணம் முல்லையா?

  இதனால் மேலும் கடுப்பாகும் வெண்பா கண்ணம்மாவை பற்றி தவறாக வார்த்தை விட்டு உன் பொண்டாட்டி என்பதால் நீ சப்போர்ட் செய்து தான் பேசுவ என்று கூறுகிறாள். உச்சகட்ட கோபம் கொள்ளும் பாரதி ஆமாண்டி நான் கட்டிய தாலி கண்ணம்மா கழுத்தில் இருக்கும் வரை அவள் என் பொண்டாட்டி தான் என்று அடித்து கூறுகிறான். சட்டப்படி இது தான் உண்மை என்றும், இது எங்கள் பிரச்சனை நடுவில் மூன்றாவது மனிதர்கள் வருவதை நாங்கள் விரும்பவில்லை என்று வெண்பாவிற்கு பாரதி பதில் கூறுவது போல இன்றைய எபிசோட் செல்கிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: