Home /News /entertainment /

பாரதிக்கு ஹேமா கொடுக்க போகும் அடுத்த அதிர்ச்சி.. கண்ணம்மா பற்றி தெரிய வருமா?

பாரதிக்கு ஹேமா கொடுக்க போகும் அடுத்த அதிர்ச்சி.. கண்ணம்மா பற்றி தெரிய வருமா?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடில் தனது அம்மா பற்றிய தேடலை தொடங்குகிறார் ஹேமா.

    பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மாவை தேடும் பயணத்தில் இறங்குகிறார் பாரதியின் செல்ல மகள் ஹேமா. இந்த அதிர்ச்சி செய்தி பாரதிக்கு இன்னும் தெரியாது. லட்சுமியும் ஹேமாவும் இது பற்றி முடிவு எடுக்கிறார்கள்.

    பாரதி கண்ணம்மாவில் ஒருவழியாக லட்சுமி எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்டார். அதாவது பாரதி - கண்ணம்மா தான் தனது உண்மையான பெற்றோர்கள் தொடங்கி அவர்களின் பிரிவு, டைவர்ஸ் என எல்லா விஷயமும் லட்சுமிக்கு தெரியும். ஆனால் ஹேமா பற்றிய உண்மை மட்டும் தான் லட்சுமிக்கு தெரியாது. ஹேமா யார்? ஹேமாவின் அம்மா யார்? ஹேமா எப்படி பிறந்தாள்? என ஏகப்பட்ட கேள்விகள் லட்சுமிக்கு இருக்கிறது. ஆனால் இதை யாரிடம் கேட்பது என தெரியாமல் அமைதியாக இருக்கிறார். ஒருமுறை இது பற்றி கண்ணம்மா மற்றும் செளந்தர்யாவிடம் கேட்கிறார். ஆனால் அதற்கு சரியான் பதில் கிடைக்கவில்லை.

    மோகன்லால் ரோலில் ரஜினிகாந்த்.. பிருத்வி ராஜ் சொன்ன பளீச் பதில்!

    இப்படி இருக்கையில் பாரதி லாயரிடம் டைவர்ஸ் பற்றி பேசியது ஹேமாவுக்கு தெரிந்து விட்டது. இத்தனை நாளா தனது அம்மா இறந்து விட்டார் என்று தான் ஹேமா நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் டைவர்ஸ் விஷயம் தெரிந்த பின்பு தனது அம்மா உயிருடன் இருப்பதாக ஹேமா நம்புகிறார். இதுப்பற்றி அகிலன், அஞ்சலி, வேணுவிடம் கேட்கிறார். ஆனால் பாரதிக்கு பயந்து யாருமே உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். பாரதிக்கு ஹேமா சொந்த மகள் என தெரியாது.  ஹாஸ்டலில் இருந்து வந்த குழந்தை தான் என ஹேமா, என்று  நினைத்து கொண்டிருக்கிறார்.

    கோவிலுக்கு வந்த இடத்தில் சீரியல் கதை.. சினேகா - சங்கீதா - சரண்யா கொடுத்த ஷாக்!

    இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடில் தனது அம்மா பற்றிய தேடலை தொடங்குகிறார் ஹேமா. இதுப்பற்றி லட்சுமியிடம் சொல்கிறார். லட்சுமியும் ஹேமாவின் தேடலில் தனது சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும் என நினைக்கிறார். லட்சுமியை போல் ஹேமாவும் தனது பெற்றோரை தேடும் பணியில் இறங்கி விட்டார். இது பற்றி பாரதிக்கு தெரியாது. டைவர்ஸ் கொடுக்கவில்லை என்றால் ஹேமா இதோடு இந்த விஷயத்தை மறந்து விடுவாள் என நினைத்தார், ஆனால் ஹேமாவுக்கு பாரதிக்கு ஷாக் கொடுக்கும் வகையில் கண்ணம்மா பற்றி அதாவது அவரின் நிஜ அம்மா, பாரதியின் முன்னாள் மனைவி பற்றி தேடுதலில் இறங்கிவிட்டார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி