ஆடுகளம் புகழ் மீனாளின் சொந்த அக்கா.. சீரியலில் கண்ணம்மாவின் சித்தி பாக்கியம் பர்சனல் லைஃப்!

கண்ணம்மா சித்தி

நடிப்பை தாண்டி இவரின் குரல் இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று

 • Share this:
  பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் சித்தியாக பாக்கியம் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை செந்தில்குமாரியின் பர்சனல் லைஃப்.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் குறித்த அறிமுகமே ரசிகர்களுக்கு தேவைப்படாது. பீக் டைமில் சூப்பர் டூப்பர் ஹிட் சீரியலாக ஓடிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களை மிகவும் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாகும். இதில் கண்ணம்மாவின் சித்தியாக நெகட்டிவ் ரோலில் நடிப்பவர் நடிகை செந்தில்குமாரி. தொடக்கத்தில் இருந்தே இவரின் நடிப்பு இந்த சீரியலுக்கு மிகப் பெரிய பலமாக உள்ளது. கண்ணம்மாவை அஞ்சலிக்காக கொடுமைப்படுத்துவதில் இருந்து, சவுந்தர்யாவிடம் திட்டு வாங்கி மாட்டிக்கொள்வது வரை இவரின் பேச்சும் உடல் மொழியும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

  வெள்ளித்திரையில் ஏற்கெனவே பல படங்களில் நடித்தவர் சின்னத்திரைக்கு வந்து இங்கும் நடிப்பில் கலக்கி வருகிறார். இவரின் தங்கை மீனாள் ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரன் மனைவியாக நடித்து புகழ் பெற்றவர். அக்காவும் தங்கையும் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருப்பார்கள். ஆனால் கண்ணம்மாவின் சித்தியான பாக்கியம் குரல் மதுரை ஸ்டைலில் மிகவும் நேர்த்தியாக இருக்கும். இவரை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் ராம் தான். கற்றது தமிழ் படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பசங்க படத்தில் விமல் அண்ணியாக நடித்தார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.  பின்பு அடுத்தடுத்த படங்களில் அம்மா, அண்ணி, அக்கா ரோலில் நடிக்க தொடங்கினார். இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா, கோலிசோடா, படங்களில் துணை நடிகையாகவும் நடித்தார். அப்போது தான் விஜய் டிவியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சரவணன் மீனாட்சி சீசன்3 யில் தெய்வானை கேரக்டரில் ரியோவுக்கு அம்மாவாக நடித்தார். ஆனால் இதற்கு முன்பே ரியோ நடித்த கனா காணும் காலங்கள் தொடரில் டீச்சராகவும் செந்தில் குமாரி நடித்துள்ளார். ஆனால் அப்போது அவருக்கு அவ்வளவு பெரிய ரீச் கிடைக்கவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தீவிர விஜய் ரசிகையான இவர், விஜய் நடித்த மெர்சல் படத்திலும் நடித்திருப்பார். நடிப்பை தாண்டி இவரின் குரல் இயக்குனர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதனால் பல கிராமம் சார்ந்த திரைப்படங்களில் இவரையே டப்பிங்குக்கு அழைப்பார்கள். குறிப்பாக அவன் இவன் படத்தில் விஷாலுக்கும் இவர்தான் குரல் கொடுத்தார். தொடர்ந்து வெள்ளித்திரை, சின்னத்திரை, டப்பிங் என பிஸியாக இருக்கும் செந்தில் குமாரி இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: