Home /News /entertainment /

சீரியல் நடிகையின் குடும்ப நிகழ்ச்சியில் அப்பவே கலந்து கொண்ட பாரதி கண்ணம்மா நடிகர்! காதல் வதந்தி உண்மை தானா?

சீரியல் நடிகையின் குடும்ப நிகழ்ச்சியில் அப்பவே கலந்து கொண்ட பாரதி கண்ணம்மா நடிகர்! காதல் வதந்தி உண்மை தானா?

பாரதி கண்ணம்மா அருண்

பாரதி கண்ணம்மா அருண்

அருண் - அர்ச்சனா காதல் சர்ச்சை போய் கொண்டிருக்கும் நேரத்தில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

    விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் புகழ் பெற்றவர் சீரியல் நடிகர் அருண் பிரசாத்.இவர், ராஜா ராணி 2 சீரியல் வில்லி அர்ச்சனாவை காதலிப்பதாக பரவும் செய்தி தான் சின்னத்திரையின் ஹாட் டாப்பிக். சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவும் இந்த தகவல் உண்மையா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆனால் இந்த வதந்தி ஆரம்பம் ஆக காரணமே விஜய் டிவி தான். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டிவி டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் அர்ச்சனாவை டாக்டர், DNA என பயங்கரமாக கலாய்க்க, இருவரும் காதலிப்பதாக தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் டாப் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா. சீரியல் தொடங்கியதில் இருந்து பலரின் உள்ளம் கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது .இதில் பாரதியாக நடித்து இளம் பெண்களின் உள்ளம் கவர்ந்த சீரியல் நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் பிரசாத். இவருக்கு பெண் ரசிகைகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது.சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்க கூடிய கதாநாயகனாகவும் அருண் இப்போது இருக்கிறார்.அருண் இந்த இடத்தை எளிதில் அடைந்திடவில்லை. அவரின் கடின உழைப்புக்கு பரிசாக இந்த இடத்தை அடைந்துள்ளார். சீரியலில் அருணுக்கு இதுதான் முதல் பயணம். இதற்கு முன்பு இவரை மேயாத மான் திரைப்படத்தில் வைபவ் நண்பராக பார்த்து இருப்பீர்கள்.

    பெண்களின் ஆதர்ச நாயகன் மோகனின் 2வது ஆட்டம்!

    இவரும் ராஜா ராணி 2 சீரியலில் வில்லி ரோலில் நடிக்கும் விஜே அர்ச்சனாவும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லை கடந்த சில தினங்களாக பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அருண்  விலக போவதாகவும் அவருக்கு பதில் சஞ்சீவ் அந்த ரோலில் நடிக்க இருப்பதாகவும் ஒருபக்கம் வலைத்தளத்தில் செய்திகள் போய் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில், கடந்த ஆண்டு அர்ச்சனாவின் தங்கை பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ நெட்டிசன்கள் கண்ணில் பட்டுவிட்டது.



    அதாவது கடந்த ஆண்டு அர்ச்சனா தனது செல்ல தங்கைக்காக ப்ர்த்டே சர்ப்பிரைஸ் பார்டிக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார். அந்த பார்டியில் அர்ச்சனா மற்றும் அவரின் தங்கை நண்பர்கள் என நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளனர். அந்த லிஸ்டில் அருண் பிரசாத்தும் ஒருவர். அர்ச்சனாவின் தங்கையின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அருணும் கலந்து கொண்டு கிஃப் கொடுத்துள்ளார்.

    மிகப் பெரிய எதிர்பார்ப்பில் எதிர் நீச்சல் சீரியல்.. ஜனனிக்காக சக்தி எடுத்த முடிவு!

    அதே போல் இருவரும் ரெட் கலரில் ட்ரெஸ் அணிந்து இருக்கின்றனர். கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு முன்பு வெளியான இந்த வீடியோ தற்போது அருண் - அர்ச்சனா காதல் சர்ச்சை போய் கொண்டிருக்கும் நேரத்தில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி