ஒருநாள் சம்பளம் மட்டுமே இவ்வளவு! கஷ்டத்திலும் சாதித்த பாரதி கண்ணம்மா அருண்!

பாரதி கண்ணம்மா அருண்

மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் படிப்பை பிரதானமாக நம்பி அதுச்சார்ந்த பணிகளையே செய்தார்.

 • Share this:
  பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் பாரதியாக நடிக்கும் நடிகர் அருண் பிரசாத் பற்றி பலருக்கும் தெரியாத சுவாரசியமான தகவல்கள்

  விஜய் டிவி ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் டாப் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா. சீரியல் தொடங்கியதில் இருந்து பலரின் உள்ளம் கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது பாரதி கண்ணம்மா.இதில் பாரதியாக  நடித்து இளம் பெண்களின் உள்ளம் கவர்ந்த சிரியல் நடிகராக வலம் வரும் நடிகர் அருண் பிரசாத் உண்மையில் மிகவும் கடினமான உழைப்புக்கு சொந்தக்காரர். ஆரம்பத்தில் சீரியலில் கண்ணம்மாவை விட அதிகம் ரசிக்கப்பட்டவர் பாரதி தான். அதிலும் கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்டு அவளுக்கு அடுத்த தந்தையாக நின்ற தருணங்கள் பல பாரதி ரோலை எளிதாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. ஆனால் கண்ணம்மாவை சந்தேகப்பட்ட பின்பு வெண்பாவுடன் நெருக்கம் என பாரதியின் கதாபாத்திரம் நெகட்டிவ் ஷேடில் மாற மொத்த ரசிகர்களும் பாரதியை திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அதான் தான் அவர் நடிப்பின் வெற்றி. பாரதி இல்லாமல் கண்ணம்மா இல்லை என்பது போல் கதையும்.

  சீரியலில் அருணுக்கு இதுதான் முதல் பயணம். அறிமுகமான முதல் சீரியலிலே பட்டையை கிளப்பி விட்டார். ஏகப்பட்ட ரசிகர்களையும் சொந்தமாக்கி கொண்டார். இதற்கு முன்பு இவரை மேயாத மான் திரைப்படத்தில் வைபவ் நண்பராக பார்த்து இருப்பீர்கள். அந்த படத்திற்கு பிறகு தான், விஜய் டிவி இயக்குனர் பிரவீ ன் , அருணை பாரதி கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார் . முதலில் வெள்ளித்திரை டூ சின்னத்திரையா? என யோசித்தவர், நம்பி இறங்கி இன்று மிகப் பெரிய வெற்றியை கண்டுள்ளார். இந்த பெயரை பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து துணை நடிகராகவும், ஹீரோவாகவும் வெள்ளித்திரையில் கலக்க வேண்டும் என்பது தான் அருணின் ஆசை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அருண் பிரசாத்தின் பர்சனல் லைஃப் பார்த்தால் அவரின் சொந்த ஊர் சேலம். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்தார். மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் படிப்பை பிரதானமாக நம்பி அதுச்சார்ந்த பணிகளையே செய்தார். நண்பர்களுடன் சேர்ந்து பல ஷார்ட் பிலிம்ஸில் நடித்தார். முதன்முதலில் நிகழ்காலம் என்ற குறும்படம் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு ஏனோ வானிலை மாறுதே, மதி மயங்கினேன், கள்ளன், ஏதோ மாயம் செய்தாய், யானும் தீயவன், பகல் கனவு போன்ற பல குறும்படங்களில் நடித்தார்.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Arun Prasath இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@arun_actor)


  ஆனாலும் வெள்ளித்திரையில் கால்பதிக்க மிகவும் கஷ்டப்பட்டார். தனது விடாமுயற்சியாலும் திறமையாலும் தொடர்ந்து பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்தவருக்கு மேயாத மான் கைக்கொடுக்க, அடுத்து ஜடா படத்தில் நடிகர் கதிரின் நண்பராக நடித்தார். பாரதி கண்ணம்மா சீரியலுக்காக விஜய் டிவி வழங்கிய அவார்டை தனது பெற்றோருக்கு சமர்பித்தார். முயற்சி மட்டுமே கைக்கொடுக்கும் என நம்பிய அருண் பிரசாத் இன்று அடைந்திருக்கும் வளர்ச்சி பலருக்கும் வியப்பை தருகிறது. அதுமட்டுமில்லை சீரியலில் அருண் பிரசாத்தின் ஒருநாள் சம்பளம் மட்டுமே ரூ. 20,000 என்ற தகவலும் அண்மையில் வெளிவந்திருந்தது. மொத்தத்தின் இன்றைய இளம்தலைமுறையினருக்கு அருணின் சினிமா கெரியர் கண்டிப்பாக மோட்டிவேஷன் தான்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: