Home /News /entertainment /

பாரதியா இது நம்ப முடிலையே? விஜய் டிவி பாரதி கண்ணம்மா அருண் ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்!

பாரதியா இது நம்ப முடிலையே? விஜய் டிவி பாரதி கண்ணம்மா அருண் ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்!

பாரதி கண்ணம்மா அருண்

பாரதி கண்ணம்மா அருண்

பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் இருந்து சில நாள் விடுப்பு எடுத்து கொண்டு ஊர் சுற்ற கிளம்பியுள்ளார்.

    விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் புகழ் பெற்ற சீரியல் நடிகர் அருண் பிரசாத்தின் இன்ஸ்டாகிராம் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    விஜய் டிவி ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் டாப் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா. சீரியல் தொடங்கியதில் இருந்து பலரின் உள்ளம் கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது .இதில் பாரதியாக நடித்து இளம் பெண்களின் உள்ளம் கவர்ந்த சிரியல் நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் பிரசாத். இவருக்கு பெண் ரசிகைகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது.

    இவரின் நிஜப் பெயர் அருண் என்பதை விட பாரதி  என்றே பலரும் அழைப்பார்கள். இவரே பாரதி என்ற பெயரை கேட்டதும் ஒரு செகண்ட் திரும்பி பார்பாராம். அந்த அளவுக்கு டாக்டர் பாரதி ரோல் இவரின் வாழ்க்கையுடன் கலந்து விட்டது. அவ்வளவு எளிதாக அருண் இந்த இடத்தை அடைந்திடவில்லை. அவரின் கடின உழைப்புக்கு பரிசாக இந்த இடத்தை அடைந்துள்ளார். சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்க கூடிய கதாநாயகனாகவும் அருண் இப்போது இருக்கிறார்.

    சீரியலில் அருணுக்கு இதுதான் முதல் பயணம். இதற்கு முன்பு இவரை மேயாத மான் திரைப்படத்தில் வைபவ் நண்பராக பார்த்து இருப்பீர்கள். இவரின் சொந்த ஊர் சேலம். மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் படிப்பை பிரதானமாக நம்பி அதுசார்ந்த பணிகளையே செய்தார். நண்பர்களுடன் சேர்ந்து பல ஷார்ட் பிலிம்ஸில் நடித்தார். ஆனாலும் வெள்ளித்திரையில் கால்பதிக்க மிகவும் கஷ்டப்பட்டார். தனது விடாமுயற்சியாலும் திறமையாலும் தொடர்ந்து பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்தார். அப்போது தான் விஜய் டிவி இயக்குனர் கண்ணில் இவரின் புகைப்படம் தென்பட பாரதி கண்ணம்மா ஹீரோவானர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Arun Prasath (@arun_actor)






    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அருணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்ஸ்கள் குவிந்து வருகிரது. அதுமட்டுமில்லை அருண் சீரியலில் இருந்து விலகி விட்டதாகவும் வதந்திகள் பரவின.  என்ன காரணம் என்று விசாரித்தால் அருண் , பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் இருந்து சில நாள் விடுப்பு எடுத்து கொண்டு ஊர் சுற்ற கிளம்பியுள்ளார். வட மாநிலங்களுக்கு ட்ரகிங் சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ச்சியாக இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். ஒரு வீடியோவில் அவர் கொடுத்த கேப்ஷனில், “நீண்ட நாட்களுக்கு பின்பு பாரதி ரோலில் இருந்து வெளியே வந்து அருணாக நான்” என்று குறிப்பிட்டுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Arun Prasath (@arun_actor)






    அதற்கு அவர் சீரியலிலிருந்து விலகி விட்டதாக வதந்திகள் பரவ தொடங்கி விட்டன. இயற்கையை ரசிக்கும், ஊர்களை சுற்றி பார்க்க அதிகம் விரும்பும் அருண், சின்ன பிரேக் எடுத்து தான் இந்த பயணத்தை துவங்கியுள்ளார் என்பது அடுத்தடுத்த போஸ்ட் மூலம் அவரின் ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி