Home /News /entertainment /

மிகப் பெரிய சந்தோஷத்தில் பாரதி கண்ணம்மா அருண்.. என்ன காரணமா இருக்கும்?

மிகப் பெரிய சந்தோஷத்தில் பாரதி கண்ணம்மா அருண்.. என்ன காரணமா இருக்கும்?

பாரதி கண்ணம்மா அருண்

பாரதி கண்ணம்மா அருண்

இது தொடர்பாக வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள நடிகர் அருண், இந்தி பாடல் ஒன்றிற்கு டான்ஸ்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் துவங்கிய போது குறைவான ரசிகர்களே இருந்தனர். ஆனால் இதில் ஹீரோயின் கண்ணம்மாவாக முன்பு நடித்த நடிகை ரோஷினி ஹரிபிரியன் கணவர் பாரதியிடம் சண்டை போட்டு கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சீன்கள் மற்றும் போட்டோக்கள் மூலம் கிரியேட் செய்யப்பட்ட மீம்கள் சீரியலில் TRP-க்கு பாசிட்டிவாக வேலை செய்ய துவங்கியது.

    அதிலிருந்து தற்போது வரை பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் சீரியலிகளில் டாப் 5 சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் சினிமா வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து சமீபத்தில் விலகினார். இதனை தொடர்ந்து வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வருகிறார். இவர்களை தவிர பாரதி கண்ணம்மா சீரியலில் பிரபல சீரியல் நடிகை ரூபா ஸ்ரீ , நடிகை ஃபரீனா , நடிகை கண்மணி, நடிகர் ரிஷி கேசவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

    இதில் கண்ணம்மாவின் கணவர் வேடத்தில் பாரதியாக நடித்து வருபவர் பிரபல நடிகர் அருண் பிரசாத். சேலத்தை சேர்ந்த இவர் வெள்ளித்திரையை லட்சியமாக கொண்டு தொழில் வாழ்கையை துவக்கினார். விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்துள்ள நடிகர் அருண் பிரசாத் நிகழ்காலம், ஏனோ வானிலை மாறுதே, மதி மயங்கினேன், கள்ளன் உட்பட பல குறும்படங்களில் நடித்து பிரபலமானார். கடும் முயற்சிக்கு பிறகு வெள்ளித்திரையில் வெளியான மேயாத மான் மூலம் நடிகர் வைபவின் தோழன் வேடத்தில் நடித்தார்.

    இடையே பாரதி கண்ணம்மா சீரியல் வாய்ப்பு கிடைக்க தயக்கத்துடனே தான் பாரதி வேடத்தை ஏற்று நடிக்க துவங்கி உள்ளார். ஆனால் அவரே எதிர்பார்க்காத அளவிற்கு பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் நடிகர் அருண் பிரசாத்.



     




    View this post on Instagram





     

    A post shared by Arun Prasath (@arun_actor)






    இது தொடர்பாக வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள நடிகர் அருண், இந்தி பாடல் ஒன்றிற்கு டான்ஸ் ஆடி உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார். அப்போது உங்களுடன் டான்ஸ் ஆடலாமா என்று கேட்கும் ஒருவரை அழைத்து அவருடன் சேர்ந்து டான்ஸ் ஆடுகிறார்.

    அப்போது தனக்கு பிறந்தநாள் இன்று என்று அருண் கூற அவர் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவிக்கிறார். வடக்கிலிருந்து பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கேப்ஷனிட்டு இந்த வீடியோவை அருண் ஷேர் செய்துள்ளதால், வடஇந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கும் என தெரிகிறது. இந்த வீடியோவிற்கு கீழே அவரது ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி