முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வலுவாகும் காதல் கிசு கிசு... வீடியோவால் மாட்டிக் கொண்ட விஜய் டிவி நட்சத்திரங்கள்!

வலுவாகும் காதல் கிசு கிசு... வீடியோவால் மாட்டிக் கொண்ட விஜய் டிவி நட்சத்திரங்கள்!

அருண் - அர்ச்சனா

அருண் - அர்ச்சனா

அவர்கள் உண்மையில் காதலிக்கிறார்கள் என்பதையும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவார்கள் என்றும் தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

காதலிப்பதாக கிசுகிசுக்கப்படும் பிரபல சின்னத்திரை நடிகர்கள் ஒரே இடத்திற்கு சுற்றுலா சென்று வெளியிட்ட வீடியோக்களால் அவர்களின் காதல் ரகசியம் வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக கூறுகின்றனர் சின்னத்திரை ரசிகர்கள்.

'பாரதி கண்ணம்மா' முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் அருண் பிரசாத், 'ராஜா ராணி 2' சீரியலில் நடித்த வி.ஜே.அர்ச்சனாவை காதலிப்பதாக கடந்த இரண்டு வருடங்களாக பேசப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு அருண் ஒரு பிறந்தநாள் பார்ட்டியின் போது அர்ச்சனாவுடன் நேரம் செலவிட்ட வீடியோவும், அவர்களின் லாங் டிரைவ்வும் காதல் ஊகத்தைத் தூண்டியது.

தற்போது அர்ச்சனா சென்னைக்கு அருகில் உள்ள பிச்சாவரம் சதுப்புநில காடுகளில் படகு பயணம் செய்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதேபோல், அருண் அதே படகு மற்றும் அப்பகுதியில் உள்ள பிற சுற்றுலா இடங்களில் எடுத்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார். நெட்டிசன்கள் பிரபலங்களின் இரண்டு சமீபத்திய வீடியோக்களை ஒப்பிட்டு, அவர்கள் உண்மையில் காதலிக்கிறார்கள் என்பதையும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவார்கள் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.




 




View this post on Instagram





 

A post shared by Arun Prasath (@arun_actor)






 




View this post on Instagram





 

A post shared by Archana R (@vj_archana_)



இதற்கிடையே அருணும், அர்ச்சனாவும் இது றித்து இன்னும் வாய் திறக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay tv