Home /News /entertainment /

கடைசியில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு அந்த நல்லது நடந்து விட்டது.. ரசிகர்கள் ஹாப்பி!

கடைசியில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு அந்த நல்லது நடந்து விட்டது.. ரசிகர்கள் ஹாப்பி!

பாரதி கண்ணம்மா அஞ்சலி

பாரதி கண்ணம்மா அஞ்சலி

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது சீரியல் குறித்த முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது

    பாரதி கண்ணம்மா சீரியலில்  பாரதியின் தம்பி அகிலின் மனைவி அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்த கண்மணியின் அடுத்த சீரியல் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    ஒருகாலத்தில் விஜய் டிவியில் டி.ஆர்.பியில் முதலிடத்தில் இருந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இப்போது அந்த இடத்தை புதுசாக வந்த பல சீரியல்கள் பிடித்து விட்டன. அதற்கு பல காரணங்களை லிஸ்டு போட்டு சொல்லலாம். ரோஷினி விலகல், அகிலன், அஞ்சலி விலகல் என ஏகப்பட்ட காரணங்கள். அதிலும் குறிப்பாக பாரதி - கண்ணம்மா ஜோடிக்கு பிறகு அகிலன் - அஞ்சலி ஜோடி ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது. இப்படி சீரியல் பீக்கில் சென்றுக் கொண்டிருந்த போது தான் அகிலன் விலகினார். அவருக்கு விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதனால் சின்னத்திரையில் இருந்து மூவ் ஆகி வெள்ளித்திரைக்கு பறந்தார்.

    ஒரே நாளில் சூர்யவை மாற்றிய வெண்ணிலா.. காற்றுக்கென்ன வேலி சீரியலில் சரியான ட்விஸ்ட்!

    அடுத்த கொஞ்ச நாளில் ரோஷினியும் விலகினார். ஆனால் அவர் இதுவரை எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் தற்போது பிஸியாக இருக்கிறார். அடுத்தது, அஞ்சலியாக நடித்த கண்மணி மனோகரன். இவர், திடீரென்று சீரியலில் இருந்து விலகியதும் ரசிகர்கள் என்ன காரணம் என தெரிந்து கொள்ள அவ்வளவு ஆர்வம் காட்டினர். அப்போது தான், பாரதி கண்ணம்மா சீரியலில் செகண்ட் லீட் ரோலில் நடித்த கண்மணிக்கு ஜீ தமிழில் மெயின் ரோலில் நடிக்க வாய்ப்பு வந்ததிருப்பது தெரிந்தது.

    எம்ஜிஆருடன் இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் தெரிகிறதா?

    அந்த நாடகத்தின் பாதி தலைப்பு மட்டுமே வெளியாகி இருந்தது, அது ‘அமுதாவும் _____’ என்பதே ஆகும். குறிப்பிட்ட ஜீ தமிழ் சீரியலின் டீஸர் வீடியோ வழியாக, கண்மணி இந்த நாடகத்தில் 'அமுதா 'என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை அறிய முடிந்தது. தாயின் மறைவால் தன் படிப்பை நிறுத்தியதால் கல்விக்காக ஏங்கும் அமுதா என்கிற ஒரு கதாபாத்திரம், தனது படிப்பைத் தொடரவும் தனது கனவுகளை அடையவும் ஒரு ஆசிரியரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள், அப்படியான 'அமுதா' என்கிற வேடத்தில் தான் கண்மணி நடிக்கிறார் என்ற அப்டேட்டுகளும் அடுத்து வந்தன. ஆனால் சீரியல் கடைசி வரை டெலிகாஸ்ட் ஆகவில்லை.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இதனால் இணையத்தில் ரசிகர்கள் இதுப்பற்றி கேட்க தொடங்கினர். இன்னும் சிலர், இந்த சீரியல் ட்ராப் ஆகிவிட்டதாக வதந்திகளையும் கிளப்பி விட்டனர். ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது சீரியல் குறித்த முக்கியமான அப்டேட் வெளியாகுயுள்ளது. அதாவது கண்மணி லீட்  ரோலில் நடிக்கும் அமுதாவும் _____’ என்ற சீரியல் அடுத்த மாதம் முதல் ஜீ தமிழில் பிரைம் டைமில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

    கோகுலத்தில் சீதை சீரியல் கிளைமேக்ஸ் கூடிய விரைவில் டெலிகாஸ்ட் செய்யப்படும், இந்த சீரியல் முடிந்த பின்பு அமுதாவும் _____’ சீரியல் டெலிகாஸ்ட் தொடங்கும் எனவும் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, Vijay tv, Zee tamil

    அடுத்த செய்தி