• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலிக்கு இப்படியொரு முடிவா?

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலிக்கு இப்படியொரு முடிவா?

அஞ்சலிக்கு பிரசவத்தில் மிகப் பெரிய ஆபத்து இருக்கிறது. அதாவது குழந்தை பிறந்தால் அஞ்சலியின் உயிரே போக நேரிடும்.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியல் அடுத்தடுத்த டிவிஸ்டுகளால் ரசிகர்களை திணறடித்து வரும் நிலையில் மற்றொரு முக்கியமான கட்டத்தை சீரியல் நெருங்கியுள்ளது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதியும் கண்ணம்மாவும் அண்மைக்காலமாக மீண்டும் சேர்ந்து பயணிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் இதை பிடிக்காத வில்லி வெண்பா ஜெயிலில் இருந்தப்படி ஏகப்பட்ட சதி திட்டங்களை அரங்கேற்றி வருகிறார். அதில் ஒன்று தான் கண்ணம்மாவின் தங்கை அஞ்சலியை கடத்தும் திட்டம். இந்த திட்டத்தின் படி அஞ்சலி கோயிலுக்கு சென்ற போது வெண்பாவின் ரவுடி பிரதர்ஸ் கேங், அஞ்சலியை கடத்தி குடோனில் கட்டி போட்டுள்ளனர்.

    இந்த பக்கம் பாரதி, கண்ணம்மா விவாகரத்து வழக்கு கோர்டில் நடந்ததால் மொத்த குடும்பமும் அங்கே இருந்தனர். இதனால் அஞ்சலி கடத்தப்பட்டது யாருக்கும் தெரியவில்ல. வீட்டுக்கு வந்த அகிலன், அஞ்சலியை தேடுகிறார். பின்பு கண்ணம்மா உதவியுடன் அஞ்சலியை காரில் தேடி ரோடு ரோடாக செல்கிறார். ஒருவழியாக அஞ்சலி இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்து விட்டு, கண்ணம்மாவும் அகிலனும் அந்த குடோனுக்கு வேகமாக செல்கின்றனர்.

    அஞ்சலிக்கு இது 9 ஆவது மாதம் என்பதால் பிரசவ நாள் நெருங்கி விட்டது. இந்த நேரத்தில் குடோனில் கட்டிப்போட்டு வைத்த அஞ்சலிக்கு திடீரென்று பிரசவ வலியும் வந்துவிட்டது. குடோனில் இருக்கும் வெண்பாவின் ரவுடிகள் அகிலனை சரமாரியாக போட்டு அடித்து விடுகின்றனர். இதனால் அகிலன அந்த இடத்திலே மயங்கி விழுந்து விடுகிறார். ஆனால் கண்ணம்மா துரிதமாக செயல்பட்டு அஞ்சலியை ஓரமாக அழைத்து வந்து மருத்துவச்சி பாட்டி உதவி மூலம் பிரசவம் பார்கிறாள். ஏற்கெனவே அஞ்சலிக்கு பிரசவத்தில் மிகப் பெரிய ஆபத்து இருக்கிறது. அதாவது குழந்தை பிறந்தால் அஞ்சலியின் உயிரே போகும் என்ற அளவுக்கு.

    Vijay TV DD: விஜய் டிவி டிடி-க்கு மறுமணமா?

    இந்த நேரத்தில் அஞ்சலிக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தையை அஞ்சலியிடம் தூக்கி காண்பித்தார் கண்ணம்மா, குழந்தை முகத்தை பார்த்துவிட்டு அஞ்சலி மயக்கம் அடைந்தார். அதே போல் அகிலனுக்கும் மயக்கம் தெளியவில்லை. இப்படி இருக்க அஞ்சலி கண் விழிப்பாரா? உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையா? என்பது நாளைக்கு தான் தெரிய வரும். அஞ்சலிக்கு எந்த ஒரு சோகமான முடிவை இயக்குனர் தர மாட்டார் என நம்புகின்றனர் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: