• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஐடி கம்பெனி டூ சீரியல்... பாரதி கண்ணம்மா புது அகிலனுக்கு ரசிகர்கள் கற்றுக் கொடுத்த பாடம்!

ஐடி கம்பெனி டூ சீரியல்... பாரதி கண்ணம்மா புது அகிலனுக்கு ரசிகர்கள் கற்றுக் கொடுத்த பாடம்!

பாரதி கண்ணம்மா அகிலன்

பாரதி கண்ணம்மா அகிலன்

அகிலன் ரசிகர்களுக்கு கண்டிப்பாக என்னை ஏற்றுகொள்வது கஷ்டம் தான்.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் புது அகிலனாக தனது பயணத்தை தொடங்கி இருக்கும் சுகேஷ் பற்றி பலருக்கும் தெரியாத சுவாரசியங்கள்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரைம் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான். கண்ணம்மா - அஞ்சலி திருமண வாழ்க்கையில் தொடங்கிய இந்த சீரியல் பயணம் தற்போது இரட்டை குழந்தை உண்மையில் வந்து நிற்கிறது கிட்டத்தட்ட 4 ஆண்டுகளை நோக்கி வெற்றிக்கரமாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் - நடிகைகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. கண்ணம்மா ரோஷினி தொடங்கி பாரதி அருண், அஞ்சலி ஸ்வீட்டி, அகில் என அனைவருமே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டனர். இந்நிலையில் தான் இந்த தொடரில் அகிலன் ரோலில் நடிக்கும் அகில் சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக அகிலன் ரோலில் நடிகர் சுகேஷ் நடித்து வருகிறார்.

    யார் இந்த சுகேஷ்/ என்று கேட்பவர்களுக்கு இதோ அவர் பற்றிய இன்ட்ரோ.. ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் திருமதி ஹிட்லர் சீரியலில் கிஷோர் ரோலில் நடித்து ரீச் ஆனவர் சுகேஷ். இந்த சீரியலில் இவரின் கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. இதன் பின்பு தான் விஜய் டிவி இயக்குனர் பிரவீன் மூலம் சுகேஷூக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அகிலன் ரோலில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த சுகேஷ் தனது கடுமையான முயற்சியை போட்டுக்கொண்டிருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சினிமா மீது கொண்ட ஆசையால் ஐடி வேலையை பாதியிலேயே விட்டுட்டு நடிப்பில் முழு நேரம் கவனம் செலுத்த தொடங்கினார் சுகேஷ். அதுமட்டுமில்லை இவருக்கு டான்ஸ் என்றால் அவ்வளவு உயிர். காலேஜ் டேஸில் இருந்தே ஏகப்பட்ட டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்றுள்ளார். தனது பெற்றோரின் முழு சம்மத்துடன் மீடியாவை கெரியராக தேர்ந்தெடுத்தவர் ஆல்பம் சாங்ஸ் மூலம் தனது பயணத்தை தொடங்கினார். இதற்கிடையில் குறும்படங்களிலும் நடித்துள்ளார். அதன் மூலம் திருமதி ஹிட்லர் சீரியல் வாய்ப்பு சுகேஷூக்கு கிடைத்தது.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    👑INDIAN🇮🇳 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sugesh_quasiofficially)






    இந்நிலையில் தான் அகில் சீரியலில் இருந்து விலக, அந்த இடத்தில் சுகேஷ் நடித்து வருகிறார். இந்த ரோலில் சுகேஷ் நடிப்பது உறுதியானதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அகிலனை டேக் செய்து போஸ்ட் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் உங்கள் இடத்தை நான் நிரப்ப முயற்சி செய்கிறேன். அகிலன் ரசிகர்களுக்கு கண்டிப்பாக என்னை ஏற்றுகொள்வது கஷ்டம் தான். ஆனாலும் என்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் உங்களை மகிழ்விப்பேன் என்று தெரிவித்தார். இதற்கு உடனே பதில் கூற தொடங்கிய பாரதி கண்ணம்மா ரசிகர்கள், சுகேஷை தட்டிக்கொடுத்து வரவேற்றனர். அதுமட்டுமில்லை சீரியலில் உங்கள் நடிப்பு சிறப்பாக இருந்தால் தானாகவே பாராட்டு வர போகிறது. மற்ற எதை நினைத்து நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்களாகவே உங்கள் நடிப்பை காட்டுங்கள் எங்களின் ஆதரவு உங்களுக்கும்,. அகிலன் ரோலுக்கும் கண்டிப்பாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: