புடவையில் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ள பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை!

ஃபரினா

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஃபரினா, போட்டோஷூட் புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.

  • Share this:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல பிரபலமான சீரியல்களில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று. ஆரம்ப காலத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பப்படும் போது வீட்டில் உள்ள பெண்களே அதிகம் பார்த்து வந்தனர். பின்னர், கண்ணம்மா தன் கணவர் பாரதியிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற எபிசோட்கள் மூலமாக இணையத்தில் பெரிதாக பேசப்பட்டார்.

இப்போது இந்த சீரியலுக்கென பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அன்றிலிருந்தே பாரதி கண்ணம்மா சீரியல் டாப் கியரில் தான் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நாடகத்தில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிபிரியனும், பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் வெண்பா கதாபாத்திரத்தில் ஃபரினாவும் நடித்து வருகின்றனர். இந்த கதையில் கண்ணம்மாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கு வெண்பா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறது.

ALSO READ |  ராஜா ராணி 2 ஷூட்டிங் ஸ்பாட் - "அசிஸ்டன்ட் டைரக்டர் பரிதாபங்கள்" - வீடியோ இதோ!

அதிலும் ஃபரினாவின் வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் வியக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். இவர், சாதாரணமாக வெளியில் சென்றால் கூட இவரை கண்டு பலர் திட்டுவார்கள் என ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அவ்வாறு தன்னைப் பார்த்து வில்லி எனத் திட்டும் ரசிகர்களிடம் நான் வில்லி எல்லாம் இல்லை "எதிர் கதாநாயகி "என புது விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார். இந்த நாடகத்தில் பாரதியை எப்படியாவது திருமணம் செய்தே தீரவேண்டும் என்ற ஆசையில், பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே களங்கத்தை மூட்டி விடுவதில் இருந்து அதற்கு இடையூறாக யார் வந்தாலும் அதை தடுப்பது வரை அனைத்து வேலைகளையும் பார்க்கும் கொடூர கதாபாத்திரத்தில் செமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ALSO READ |  கிளைமாக்ஸை நெருங்கும் பிரபல சீரியல் - முடிவுக்கு வருகிறதா? ரசிகர்கள் சோகம்!

அதேபோல, விஜய் டிவி பிரபலங்களான பிரியங்கா, மகாபா, புகழ், ஷிவாங்கி, அஸ்வின், பாலா, ரக்ஷன் ஆகியோருக்கு இணையத்தில் எந்தளவுக்கு பின்தொடர்பவர்கள் இருக்கிறார்களோ அதேபோல, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களுக்கும் அதே அளவு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

அந்த வகையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஃபரினா, போட்டோஷூட் புகைப்படங்கள், ரீலிஸ், ஸ்டோரி என பதிவிட்டு வருவார். தற்போது, இவர் கருப்பு புடவையில் மிக ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வைரலாகும் படங்கள்


வைரலாகும் படங்கள்


வைரலாகும் படங்கள்


வைரலாகும் படங்கள்


இவரது புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கில் லைக்குகளும், வியூஸ்களும் கிடைத்துள்ளன. அதிலும், பலர் இவரது அழகை ரசிப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.தமிழ் திரையுலகில் தற்போது திரைப்படங்களாக இருந்தாலும் சரி சீரியல்களாக இருந்தாலும் சரி ஹீரோயினை போலவே நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்கும் கதாநாயகிகளும் அழகில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல, அழகான கதாநாயகிகள் பலர் தொடர்ந்து நெகட்டிவ் ரோலில் நடிக்க வைக்கப்படுகின்றனர் . அதிலும் ஃபரீனா தன்னுடைய திறமையை நெகட்டிவ் ரோல்களில் நன்றாக வெளிப்படுத்தி வருகிறார் என்பது அசைக்க முடியாத உண்மை.

ALSO REA |  விஜய் டிவி-யின் புத்தம் புதிய சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகர்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: