முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / முதல் சீசனில் டி.என்.ஏ டெஸ்ட்... இதுல என்னவா இருக்கும்? பாரதி கண்ணம்மா 2 சீரியல் புது அப்டேட்!

முதல் சீசனில் டி.என்.ஏ டெஸ்ட்... இதுல என்னவா இருக்கும்? பாரதி கண்ணம்மா 2 சீரியல் புது அப்டேட்!

பாரதி கண்ணம்மா 2

பாரதி கண்ணம்மா 2

பாரதியாக புதிதாக களம் இறங்குகிறார் சிபு சூர்யன். ரோஜா சீரியலில் அர்ஜுன் சாராக இவர் செய்த சாகசங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சின்னத்திரை ரசிகர்களின் பேச்செல்லாம் பாரதி கண்ணம்மா 2 சீரியலைப் பற்றி தான். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் புது முகங்கள் அருண் பிரசாத், ரோஷினி ஹரிப்ரியன், கண்மணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முக்கியமாக இந்த சீரியலில் மாமியார் சவுந்தர்யாவாக நடித்த நடிகை ரூபா ஸ்ரீ-க்கு ரோலுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

பின்னர் ரோஷினி ஹரிப்பிரியன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலக, அவருக்கு பதில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் புதுமுகம் வினுஷா தேவி அறிமுகமானார். அதோடு, அஞ்சலி, அகிலன் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் மாற்றப்பட்டனர்.

கதைப்படி கண்ணம்மா கர்ப்பமாக இருக்கும் போது அவள் மீது சந்தேகப்பட்டு, பாரதி வீட்டை விட்டு அனுப்பி விட்டான். இதற்கு முழு காரணமும் வில்லி வெண்பா தான். வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மாவுக்கு 2 பெண் குழந்தைகள் பிறக்கிறது. அதில் லட்சுமி கண்ணம்மாவுடன் வளர, மற்றொரு மகள் ஹேமா, பாரதியிடம் இருக்கிறார். ஹேமா தனது நிஜமான குழந்தை என்பது பாரதிக்கு தெரியாது. ஆனால் லட்சுமிக்கு எல்லா உண்மையும் தெரியும். கண்ணம்மா எத்தனையோ முறை கெஞ்சி கேட்டும் டி.என்.ஏ டெஸ்ட் எடுக்காத பாரதி ஒருவழியாக அதையும் எடுத்து, உண்மையை தெரிந்துக் கொள்கிறான்.

ஹேமாவும், லட்சுமியும் தனது குழந்தைகள் தான் என்பதை ஏற்றுக் கொண்ட பாரதி, தவறை உணர்ந்து கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறான். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத அவள், குழந்தைகளோடு கிராமத்துக்கு சென்று விடுகிறாள். அவளை தேடிச் சென்று சமதானப்படுத்த முயன்ற பாரதிக்கு தோல்வியே மிஞ்சுகிறது. கண்ணம்மா விருப்பத்தின் பேரில் அவளுக்கு விவாகரத்தும் தருகிறான் பாரதி.

பின்னர் தலையில் அடிப்பட்டு, சுய நினைவை இழந்த பாரதிக்கு, கண்ணம்மா மட்டுமே நினைவில் இருக்கிறாள். அவள் உதவியுடன் மறுபிறவி எடுக்கும் பாரதி, மீண்டும் கண்ணாமாவை திருமணம் செய்துக் கொண்டதோடு சீரியலுக்கு சுபம் போட்டார்கள். முன்பு போல கதை சுவாரஸ்யமாக இல்லை என, சீக்கிரம் பாரதி கண்ணம்மா சீரியலை முடியுங்கள் என கோரிக்கை வைத்தார்கள் சின்னத்திரை ரசிகர்கள். ஒருவழியாக சீரியலும் முடிந்து விட்டது என சந்தோஷப்படுவதற்குள் பாரதி கண்ணம்மா 2 ப்ரோமோவை வெளியிட்டது விஜய் டிவி.

' isDesktop="true" id="885846" youtubeid="UWssge9xco4" category="television">

ஹேமா, லட்சுமி வளர்ந்து விட்டார்கள் என அவர்களை மையமாக வைத்து பாரதி கண்ணம்மா 2 சீரியல் இருக்குமா என்று பார்த்தால், அது இல்லை. இதில் பாரதியாக புதிதாக களம் இறங்குகிறார் சிபு சூர்யன். ரோஜா சீரியலில் அர்ஜுன் சாராக இவர் செய்த சாகசங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மீண்டும் கண்ணம்மாவாக வினுஷா தேவி. பாரதியின் அம்மாவாக மீண்டும் ரூபாஸ்ரீ, இதில் கணவரை இழந்தவராக இருக்கிறார்.

டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பதை மையப்படுத்தி பாரதி கண்ணம்மா முதல் சீசன் 2 ஆண்டுகளுக்கும் மேல் ஓடியது. அப்படி எனில் இரண்டாம் பாகத்தில் என்ன ட்விஸ்டோ என இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். இன்று இரவு 9 மணிக்கு இதன் முதல் ஒளிபரப்பு துவங்குகிறது.

First published:

Tags: Vijay tv