சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே பல்வேறு காரணங்களுக்காக சமூக வலைதளங்களில் ட்ரெண்டாவர்கள். அது நல்ல விஷயங்களுக்காகவும் இருக்கலாம் அல்லது மோசமான விஷயங்களுக்காகவும் இருக்கலாம். அவ்வகையில் பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பத்தில் பாசிட்டிவான விஷயங்களுக்காக மிகப்பெரிய அளவுக்கு வரவேற்பைப் பெற்றது. ஆனால் தொடக்கம் முதல் இப்போது வரை ஒரே ஒரு விஷயத்தை சுற்றி மட்டுமே கதை நகர்ந்து கொண்டிருப்பதால் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் வெண்பா அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார்.
வெண்பாவாக நடிகை
ஃபரீனா நடித்து வருகிறார். இவருடைய வில்லத்தனத்திற்காகவே சீரியல் கணிசமான வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி கதைக்களத்தில் ஃபரீனாவின் கதாபாத்திரத்தால் மிகப்பெரிய திருப்புமுனை மற்றும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகுவதாக இடையில் அறிவித்தார். நிரந்தரமாக இவரும் வெளியேறி விடுவாரோ என்ற நினைத்துக்கொண்டிருக்கும் போதே, குழந்தை பிறந்த பின்பு மீண்டும் சீரியலில் நடிக்கத் துவங்கினார்.
வெண்பாவாக, வில்லி ரோலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இவரது கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென்று சமூக வலைத்தளங்களில் மிக பெரிய அளவு ரசிகர் கூட்டத்தை பெற்றவர் ஃபரீனா. அதுமட்டுமின்றி, சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக ஏதாவது செய்து கொண்டே இருப்பார். கர்ப்பம். சீமந்தம், போட்டோ ஷூட் என்று எல்லாவற்றையுமே தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்து வந்தார்.
இதையும் படிங்க.. முடிவில் உறுதியாக இருக்கும் டாக்டர் பாரதி… என்ன செய்ய போகிறார் கண்ணம்மா?
குழந்தை பிறந்தது, குழந்தையுடன் இருப்பது என்று ஒரு சில குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்த போது நிறைய நெகிழ்ந்த நெட்டிசன்கள், தற்போது வறுத்தெடுக்கின்றனர்
. ஃபரீனா ஒரு பாடலுக்கு வாயசைத்து, டிக்டாக் வீடியோ போல ரீல்ஸ் ஒன்றை, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டார். அந்த பதிவுக்கு ரசிகர் ஒருவர் “உங்கள் குழந்தைக்கு இரண்டு மாதம் தானே ஆகிறது நீங்கள் ஓய்வு நேரத்தை உங்கள் குழந்தையுடன் செலவழிக்கலாமே” என்று அவருக்கு கமெண்ட் செய்திருந்தார். ஆனால் அதற்குஃபரீனா “என்னைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதை நிறுத்துங்கள் அவன் எப்போதுமே என்னுடன் தான் இருக்கிறான்” என்று பதில் தெரிவித்திருந்தார்.
“ஃபரீனா எப்பொதுமே மோசமாகத்தான் நடந்து கொள்வார். அவருடைய பக்கத்தில் நீங்கள் எதையும் கமெண்ட் செய்து உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டாம். இவர் உண்மையான வாழ்க்கையிலும் மோசமான பெண்ணாகத்தான் இருப்பார் போல, எப்போதுமே இவர் ரசிகர்களுக்கு ஒழுங்காக பதில் அளித்ததில்லை, கடுமையாகத்தான் நடந்து கொண்டுள்ளார். எனவே நீங்கள் அவரை ப்ளாக் செய்து விட்டு செல்லுங்கள்” என்று மற்றொரு நபர் கூறியிருந்தார். ரசிகர்களை மதிக்கத் தெரியவில்லை என்ற ரீதியில் ஃபரீனாவை விமர்சித்து வருகின்றனர்இணையவாசிகள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.