• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • படிக்கும் போதே சினிமா ஆசை... அதற்காக எடுத்த பெரிய முடிவு! பாரதி கண்ணம்மா ‘அகிலன்’ பெர்சனல் பக்கம்

படிக்கும் போதே சினிமா ஆசை... அதற்காக எடுத்த பெரிய முடிவு! பாரதி கண்ணம்மா ‘அகிலன்’ பெர்சனல் பக்கம்

பாரதி கண்ணம்மா அகிலன்

பாரதி கண்ணம்மா அகிலன்

மாடலிங் செய்துகொண்டே பல விளம்பரங்களில் நடித்து வந்தார்.

  • Share this:
    ஸ்மார்ட் பாய், மேன் லுக் என தான் நடித்த முதல் சிரீயலிலே பெண் ரசிகைகளைக் கவர்ந்துவிட்டார் அகிலன். பாரதி கண்ணம்மா சீரியலில் அகில் ரோலில் நடிக்கும் அகிலனின் இன்ஸ்டா பக்கம் போய் பாருங்கள். பெண் ரசிகைகளின் பட்டியல் நீளும்.

    அகிலன் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் படித்த எஸ்.ஏ கல்லூரியில் தான் கனா காணும் காலங்கள் ஷுட்டிங் நடைபெற்றது. அதிலிருந்து தான் அகிலனுக்கு சினிமா மேல் தீராத காதல். எப்படியாவது சினிமாவில் நுழைந்துவிட வேண்டும் என எண்ணியவர் மாடலிங் செய்ய தொடங்கினார். அதனைத்தொடர்ந்து குறும்படங்களிலும் நண்பர்களுடன் சேர்ந்த்து நடிக்க ஆரம்பித்தார்.

    இதுவரை, உனக்கென நான், அடி பெண்ணே, RAA, கதிரும் நிலவும் போன்ற பலகுறும்பங்களில் நடித்துள்ளார்.அத்துடன் மாடலிங் செய்துகொண்டு பல விளம்பரங்களில் நடித்து வந்தார். ஷார்ட் பிலிம்களில் நடித்ததன் மூலம் சினிமா வட்டாரங்களில் இவரின் முகம் தெரிய தொடங்கியது. காஜல் அகர்வால் போன்ற பல முன்னணி நடிகைகளுடன் விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.

    டான்ஸ் மீது கொண்ட காதலால் டான்சரையே மணந்தார்... வில்லாதி வில்லி காயத்ரி கெரியர் லைஃப்

    அதன் பின்பு வெள்ளித்திரையில்இவர் முதல் படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா வெளியானது. அதனைத்தொடர்ந்து இறைவி,பியார் பிரேமா காதல் போன்ற படங்களில் நடித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அகிலனுக்கு நெருக்கமான பலரும் நீ அழகாக இருப்பதால் வெள்ளித்திரையிலேயே அதிக கவனம் செலுத்து, சின்னத்திரை பக்கம் சென்றால் சீரியல் ஹீரோவாக மாற்றிவிடுவார்கள், வாய்ப்புகள் கை நழுவி போய்விடும் என அட்வைஸ் செய்துள்ளனர். இதனால் அகிலனுக்கு நிறைய சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்த போதும் அதை மறுத்த வந்துள்ளார். இதனிடையே விஜய்டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க அகிலனை கேட்டுள்ளனர். இயக்குநர் பிரவீன் பென்னட் தொடர்ந்து வற்புறுத்தியதால் அகில் ரோலில் நடிக்க அகிலன் ஓகே சொன்னார். ஆரம்பத்தில் அஞ்சலியை காதலிக்கும் கதாப்பாத்திரம் போக போக கண்ணம்மா அண்ணி, வெண்பாவை மிரட்டுவது என அகிலனை ரசிகர்களுக்கு பிடித்து போயிற்று.

    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூடன் அகிலன்.


    உடற்பயிற்சி செய்வதை கட்டாயம் ஃபாலோ செய்யும் அகில், சமீபத்தில் வெள்ளித்திரையில் 2 படங்களில் கமிட் ஆகியுள்ளார். தெலுங்கு, கன்னடத்திலிருந்தும் அகிலனுக்கு வாய்ப்புக்கள் வர தொடங்கியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: