• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாரதி கண்ணம்மா சீரியலுக்கு குட்பை சொன்ன முக்கிய நடிகர் - ரசிகர்கள் ஏமாற்றம்!

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு குட்பை சொன்ன முக்கிய நடிகர் - ரசிகர்கள் ஏமாற்றம்!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

இந்த சீரியலில் பாரதியின் தம்பியாக அகில் என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகர் அகிலன் புஷ்பராஜ்.

  • Share this:
ஸ்டார் விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் பார்தி கண்ணம்மா. பல்வேறு சேனல்களிலும் தமிழ் திரைப்படங்களின் பெயர்களை தங்கிய சீரியல்கள் பல ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி-யில் திரைப்படங்களின் பெயர்களை கொண்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன. இதில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இந்த சீரியல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் பாரதியாக நடிகர் அருண் பிரசாத், கண்ணம்மாவாக நடிகை ரோஷினி ஹரிபிரியன் தாஸ் நடித்து வருகின்றறனர். சென்னையில் பிரபல மருத்துவராக இருக்கும் பாரதி, சிறந்த குணமுள்ள பெண்ணான கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், பாரதியை அடைய நினைத்த சக மருத்துவரான வெண்பா இருவரது வாழ்விலும் கட்டம் கட்டி விளையாடுகிறார். மனைவி மேல் மிகுந்த பாசமாக இருந்த பாரதி, ஒரு கட்டத்தில் கண்ணம்மாவை சந்தேகப்பட்டு வெறுத்து ஒதுக்குகிறான். இதனால் கணவன் வீட்டை விட்டு வெளியேறிய போது கர்ப்பிணியாக இருந்த கண்ணம்மா நடந்தே பல கிலோ மீட்டர் நடந்து சென்றது மீம்ஸ் மூலம் பிரபலமானது நினைவிருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மீம்ஸ்களுக்கு பிறகு பாரதி கண்ணம்மாவிற்கு ரசிகர் வட்டம் அதிகரித்தது. இந்த சீரியலில் பாரதியின் தம்பியாக அகில் என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகர் அகிலன் புஷ்பராஜ். இவருக்கும் ரசிகர்கள் அதிகம். கதைப்படி கண்ணம்மாவின் சித்தி மகளான அஞ்சலியை தான் அகில் திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த வீட்டில் பாரதியை தவிர அஞ்சலி, அகிலன், பாரதியின் தாய், தந்தை என அனைவருமே கண்ணம்மாவின் ஆதரவாளர்கள் மற்றும் வெண்பாவின் குணமறிந்தவர்கள். எனவே இந்த சீரியலில் அகில் முக்கியமான கேரக்டர்.

Vijay TV Bharathi Kannamma Akil quits the serial, bharathi kannamma, bharathi kannamma today episode, bharathi kannamma live streaming, Vijay TV Bharathi Kannamma Serial, baharathi kannamma Latest Update, bharathi kannamma hotstar, பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ, Bharathi Kannamma akilan, Bharathi Kannamma akilan quits, Bharathi Kannamma akil anjali, akil anjali, பாரதி கண்ணம்மா அகில், பாரதி கண்ணம்மா அகிலன், அகில் அஞ்சலி, bharathi kannamma akilan instagram, bharathi kannamma akilan wife, bharathi kannamma akilan girlfriend, bharathi kannamma akilan marriage, akilan spr

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் அகில் கேரக்டரில் வேறு ஒரு நடிகர் இனி இவருக்கு பதில் இவர் என்ற டைட்டிலுடன் நடிப்பை தொடர்ந்தார். இதனால் பாரதி கண்ணம்மாவின் தீவிர ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நடிகர் அகில் தவிரக்க இயலாத காரணத்தால் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகி உள்ளார். எனவே இனி அகில் கேரக்டரில் சுகேஷ் என்பவர் தொடர உள்ளார். தனது இயல்பான நடிப்பு மற்றும் ஸ்டைலான உருவத்தால் ரசிகர்களை கவர்ந்த அகிலன் சீரியலை விட்டு விலகி இருப்பது அவரது பாரதி கண்ணம்மா ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

எனினும் அகில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் சின்னதிரையை விட்டு விலகிய அகிலன், விரைவில் வெள்ளித்திரையில் வெளியாக உள்ள சில படங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். மாடலிங், ஷார்ட் ஃபிலிம் துறையில் கால் பதித்த போது கிடைத்த சீரியல் வாய்ப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அகிலன். சினிமாவில் நுழைந்து சாதிக்க வேண்டும் என்பதே இவரது இலக்கு.

Also read... முதலாம் ஆண்டு திருமண நாளை கணவருடன் சிறப்பாக கொண்டாடிய பிரபல சீரியல் வில்லி - வைரலாகும் போட்டோ ஷூட்!

அதேகேற்றார் போல அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்த காரணத்தால் சீரியலுக்கு குட்பை சொல்ல முடிவெடுத்ததாக சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார். வீரமே வாகை சூடும், பீட்சா 3', பகீரா போன்ற படங்களில் நடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சீரியலில் நடித்த போது இவ்வளவு ரசிகர்கள் தனக்கு இருப்பதை உணரவில்லை என்றும், சீரியலை விட்டு விலகிய பிறகே எண்ணற்ற ரசிகர்கள் தனக்கு இருப்பதை புரிந்து கொண்டுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: