• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எல்லாருக்கும் டாட்டா.. சீரியலில் தனது கடைசி நாளை கேக் வெட்டி கொண்டாடிய ரோஷினி..

எல்லாருக்கும் டாட்டா.. சீரியலில் தனது கடைசி நாளை கேக் வெட்டி கொண்டாடிய ரோஷினி..

ரோஷினி ஹரிபிரியன்

ரோஷினி ஹரிபிரியன்

Vijay TV Bharathi Kannamma Serial : பாரதி கண்ணம்மா சீரியலில் தனது கடைசி நாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகை ரோஷினி..

  • Share this:
தொலைக்காட்சி சேனல்களில் சீரியல்களுக்கென தனி இடம் பிடித்த சேனல்கள் என்றால் அதில் ஒன்று சன் டிவி மற்றொன்று விஜய் டிவி. ஏனெனில் இந்த இரு தொலைக்காட்சி சீரியல்கள் தான் டிஆர்பி-யில் டாப் வரிசையில் இடம்பிடித்து வருகிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இல்லத்தரசிகளின் பேவரட் எனலாம். அந்த அளவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டத்தளத்தை கொண்டுள்ளது. டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிப்பதில் பாரதி கண்ணம்மா சீரியல் போட்டிபோட்டுக் கொண்டு விறுவிறுப்பான கதைக்களத்தை அமைத்து வருகிறது.

இந்த நிலையில், விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் கண்ணமாகவாக நடித்து வந்த ‘ரோஷினி ஹரிப்ரியன்’ சீரியலில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். இந்த செய்தி பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு சீரியலுக்கு மிகப்பெரிய பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் சீரியலில் கண்ணம்மாவாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் கண்ணம்மாவாகவே வாழும் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சீரியலை விட்டு விலகுவதை ஏற்க முடியாது என ரசிகர்கள் மத்தியில் கருத்துக்களும் வெளியாகின.



அவருக்கு பதிலாக யார் நடிக்க போகிறார் என்ற தகவலும் வெளியாகின. அதனை உறுதி செய்யும் விதமாக, கண்ணம்மாவாக புதிய கதாநாயகி வினுஷா தேவி நடித்துள்ள புதிய ப்ரோமோவும் வெளியானது. வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் காரணமாகவே பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி விலகியுள்ளார் என்று தகவல் வெளியானது.இதுகுறித்து ரோஷினியின் நண்பர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளதாவது, சீரியல் மூலம் ரோஷினிக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்தது என்னவோ உண்மை தான். ஆனால், ரோஷினி அந்த வாய்ப்புகளை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. நிதானமாக யோசித்து முடிவெடுக்கலாம் என்று இருந்தார். இந்தநிலையில் தான் அவரை சில பெரிய பேனரில் இருந்து கேட்டு வந்தார்கள்.



also read : 200 எபிசோட்களை கடந்த புதுப்புது அர்த்தங்கள்.. நன்றி தெரிவித்த நடிகை தேவயானி!

அப்போது தொடர்ச்சியாக நீங்கள் சினிமாவில் படம் பண்ணலாம். ஆனால், சீரியலில் ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறது உங்களுடைய அடையாளத்தை சினிமாவில் குழைக்கும். இதனால் ஹீரோயினியாக இல்லாமல், துணை நடிகை வாய்ப்புகள் தான் வரும் என்று சொன்னார்கள். இதனால் கொஞ்ச நாளாகவே ரோஷினி குழப்பத்தில் இருந்தார். கடைசியில் தான் ரோஷினி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் தனது கடைசி நாளை, தன்னுடைய சக நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனருடன் ரோஷினி ஹரிபிரியன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.


இந்த வீடியோ தற்போது கண்ணம்மாவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலர் ரோஷினி சீரியலில் இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை டிஆர்பி-யில் டாப் வரிசையில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் இனி அந்த இடத்தை தக்கவைக்குமா என்பது சந்தேகம் தான் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: