Home /News /entertainment /

பாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. தேடி வந்து பார்த்த கண்ணம்மா

பாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. தேடி வந்து பார்த்த கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

Bharathi Kanamma Serial Update | பாரதி கண்ணம்மாவில் முதன்முறையாக பாரதி, கோபம் இல்லாமல் கண்ணம்மாவிடம்  பேசுகிறார்.

    பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் அம்மாவாக நடிக்கும் ரேகாவின் என்ட்ரிக்கு பிறகு சீரியல் கலகலப்பாக பயணிக்க தொடங்கியுள்ளது. வெண்பாவுக்கு இப்படியொரு அம்மா ரோலில் நடிகை ரேகா அதகளம் செய்கிறார்.

    பாரதி - கண்ணம்மா இருவரும் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக பிரிந்து இருக்க காரணமே வெண்பா தான். ஆனால் வெண்பா எதற்காக இப்படியெல்லாம் செய்தாரோ அந்த ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை. பாரதியை கல்யாணம் செய்துக் கொள்ள தான் வெண்பா காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரம் பார்த்து வெண்பாவின் அம்மா, அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். வந்த முதல் நாளே பாரதியிடம் போய் பேசினார். ஆனால் பாரதி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. வெண்பாவை கூப்பிட்டு சரமாரியாக திட்டி விடுகிறார்.

    பணம் அனுப்பும் விதிமுறையை திடீரென்று மாற்றிய எச்.டி.எப்.சி வங்கி!

    அதுமட்டுமில்லை, வெண்பவை இனிமேல் கல்யாணம் செய்துக் கொள்ள மாட்டேன் என அடித்துக் கூறுகிறார். வெண்பாவிடமும் நீ வேற யாரையாவது திருமணம் செய்து கொள் என்கிறார்.  இன்றைய எபிசோடில் இந்த வெறுப்புடன் வீட்டுக்கு வரும் வெண்பாவிடம் மீண்டும் அவரின் அம்மா ஷர்மிளா கல்யாணம் பற்றி பேச, பாரதி இன்னும் கொஞ்சம் நாட்களில் தன்னை கல்யாணம் செய்து கொள்வார் என பொய் சொல்கிறார் வெண்பா. ஆனால் அந்த பொய்யை கண்டுபிடித்த அவரின் அம்மா, இனிமேல் எந்த ஜென்மத்திலும் பாரதி உன்னை கல்யாணம் செய்து கொள்ள மாட்டார் என உண்மையை சொல்கிறார். இதுஒரு புறம் இருக்க, டாக்டர் பாரதிக்கு மனிநேயம் விருது வழங்கப்படுகிறது.

    IOB : திடீர் அறிவிப்பு.. அந்த திட்டத்திற்கு மட்டும் வட்டியை குறைத்தது!

    இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு, லட்சுமி பாரதியை பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். கண்ணம்மா பேச்சை மீறி ஆஸ்பிட்டல் போய் பாரதியை பார்க்கிறார் லட்சுமி. ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் பாரதிக்கு இப்படியொரு கவுரவம் கிடைத்து இருப்பதை நினைத்து பெருமைக் கொள்ளும் கண்ணம்மா, ஓடிச் சென்று பாரதிக்கு வாழ்த்துக்களை கூறுகிறார். முதன்முறையாக பாரதியும் கோபம் இல்லாமல் கண்ணம்மாவிடம்  பேசுகிறார். இதற்கு காரணம் யார் என்றால் லட்சுமி தான்.

    ஏற்கனெவே இணையத்தில் பரவி வரும் தகவலின் படி, லட்சுமியும் ஹேமாவும் தான் கண்ணம்மாவையும் பாரதியையும் சேர்த்து வைப்பார்கள் போல.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி