Home /News /entertainment /

பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போறாங்களாம்.. வெண்பா கொடுத்த அதிர்ச்சி!

பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போறாங்களாம்.. வெண்பா கொடுத்த அதிர்ச்சி!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோயினுக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த வில்லி கதாபாத்திரத்தில் வெண்பா ரோலில் நடிகை மற்றும் விஜே-வான ஃபரீனா ஆசாத் நடித்து வருகிறார்.

    பாரதி கண்ணம்மா சீரியல் எப்போது முடியும்?  என ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில் கேட்ட கேள்விக்கு வில்லி வெண்பா பதிலளித்துள்ளார்.

    விஜய் டிவி-யில் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றாக ஒளிப்பரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா தொடர் இப்போது ரசிகர்கள் அதிகம் வெறுக்கக்கூடிய சீரியலாக மாறிவிட்டது. பாரதி கண்ணம்மா சீரியல் புரமோ மட்டுமில்லை எந்த சீரியல் புரமோ வெளியானாலும் ரசிகர்கள் பதிவிடும் ஒரே கமெண்ட் சீக்கிரமா பாரதி கண்ணம்மா சீரியலை முடியுங்கள் என்பது தான். முன்பு இந்த சீரியல் மக்களிடையே பிரபலமாக முக்கிய காரணம் இதில் கண்ணம்மாவாக நடித்த நடிகை ரோஷினி ஹரிபிரியன் தான். தற்போது கண்ணம்மா கேரக்டரில் நடிகை வினுஷா தேவி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ரோஷினியின் விலகலை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

    COOK WITH COMALI : பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இறுதி போட்டி.. வெற்றியாளர் யார்?

    ஆனால் அதன் பின்பு தனது நடிப்பால் வினுஷா தேவி அந்த குறையை மறக்க செய்தார். ஆனாலும் கதையில் பெரிய சுவாரசியம் இல்லை. ட்விஸ்ட் இல்லை, அரைத்த மாவையே வைத்து இயக்குனர் கதை சொல்வதால் ரசிகர்கள் பொறுமை இழந்து விட்டனர். ஒரு DNA டெஸ்ட் எடுத்தால் முடிய வேண்டிய சீரியலை 4 ஆண்டுகள் இயக்குனர் கடத்தி விட்டார். ரசிகர்களும் அதை விரும்பி பார்த்தார்கள். ஆனால் கடந்த 2 வருடமாக ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மாட்டிக் கொண்டது இவ்வளவு சீக்கிரமா  காட்டப்பட்டு விட்டதால் ரசிகர்கள் இந்த கதையின் மீது பொறுமையை இழந்துள்ளனர். இந்த அதிருப்தி தான் அவர்களை இப்படி பேச வைக்கிறது.

    விஜே அஞ்சனா வீட்டில் திடீர் இழப்பு.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!

    பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோயினுக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த வில்லி கதாபாத்திரத்தில் வெண்பா ரோலில் நடிகை மற்றும் விஜே-வான ஃபரீனா ஆசாத் நடித்து வருகிறார். சீரியலில் மட்டுமல்ல நிஜத்தில் எங்காவது வெளியில் பார்த்தால் கூட ஃபரீனாவை கரித்து கொட்டும் அளவிற்கு இல்லத்தரசிகள் அவர் மீது  கடுப்புடன் சுற்றுகின்றனர். அந்த அளவிற்கு வில்லத்தனத்தில் பின்னிபெடலெடுத்து வருகிறார் ஃபரீனா .ரோஷினியின் விலகலுக்கு பின்பு  இவருக்காகவே  இந்த தொடரை சிலர் மிஸ் செய்யாமல் பார்க்கின்றனர்.



    இந்நிலையில் இவரிடம் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில் பாரதி கண்ணம்மா சீரியல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது பாரதி கண்ணம்மா தொடர் எப்போது முடிவுக்கு வரும்? ப்ளீஸ் சீக்கிரமா முடிங்க பார்க்க முடியல என தெரிவித்துள்ளார். அதற்கு ஃபரீனா, “சரிங்க, புரியுது! அந்த டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துருவோம்” என தெரிவித்துள்ளார். ஃபரீனா இந்த பதிலை விளையாட்டாக சொன்னாரா? இல்லை சீரியலில் கூடிய விரைவில் டிஎன்ஏ டெஸ்ட் பாரதிக்கு எடுக்கப்படவுள்ளதா? என்பதை பொறுத்திருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி