Home /News /entertainment /

உண்மையை தெரிந்து கொள்ளும் ஹேமா... பாரதி - கண்ணம்மா ரகசியம் உடைந்தது!

உண்மையை தெரிந்து கொள்ளும் ஹேமா... பாரதி - கண்ணம்மா ரகசியம் உடைந்தது!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

கண்ணம்மாவை லாரி ஏற்றி கொள்ள பிளான் செய்கிறார் வெண்பா.

    பாரதி கண்ணம்மா சீரியலில் சமையல் அம்மாவின் உண்மையான பெயர் என்ன? என்பது ஹேமாவுக்கு தெரிந்து விட்டது. அதுமட்டுமில்லை கூடிய விரைவில் ஹேமாவுக்கு கண்ணம்மா தான் தன்னுடைய நிஜ அம்மா என்ற உண்மை தெரிய வரும் எபிசோடை ரசிகர்கள் வரும் வாரங்களில் எதிர்பார்க்கலாம்.

    பாரதி - கண்ணம்மாவின் 9 ஆண்டு ரகசியம் லட்சுமிக்கு ஏற்கெனவே தெரிந்து விட்டது. கண்ணம்மா - பாரதி பிரிந்ததற்கான காரணத்தை தவிர மற்ற எல்லா உண்மைகளும் லட்சுமிக்கு தெரியும். எல்லாம் தெரிந்தும் லட்சுமி தனது அம்மா கண்ணம்மாவுக்காக பாசத்தை மறைத்துக் கொண்டு அமைதியாக போகிறர். ஆனால் ஹேமாவுக்கு இதுவரை எந்த உண்மையும் தெரியாது. இவ்வளவு நாளாக ஹேமா தனது அம்மா இறந்து விட்டர் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிந்தார். பாரதியும் அப்படி தான் சொல்லி வைத்து இருந்தார்.

    பாக்கியலட்சுமியில் கோபியின் நாடகம் முடிவுக்கு வரும் நேரம்..குடும்பத்துக்கு உண்மை தெரிந்தது!

    இதனால் தான் பாரதிக்கு இன்னொரு கல்யாணம், செய்ய வேண்டும் என்ற முடிவுக்கே ஹேமா வந்தார். கண்ணம்மா - பாரதியின்  டைவர்ஸ் விஷயத்தை டாக்டர் பாரதி லாயரிடம், பேசி கொண்டிருந்ததை கேட்ட ஹேமா, தனது அம்மா உயிரோடு இருப்பதை தெரிந்து கொண்டார். இது பற்றி குடும்பத்தாரிடம் கேட்டார் ஆனால் பதில் இல்ல. இந்நிலையில் லட்சுமியை போலவே தேடி கண்டுப்பிடிக்க களத்தில் இறங்கினார்,

    ரசிகையின் மன அழுத்தம் மெசேஜ்.. குக் வித் கோமாளி குரேஷி கொடுத்த ரிப்ளை!

    இப்படி இருக்கையில் இந்த வார எபிசோடுக்கான ஹைலைட் புரமோ வெளியாகியுள்ளது. ஹேமாவுக்கு  சமையல் அம்மா என அழைக்கும் கண்ணமாவின் நிஜ பெயர்  தெரியாது. காரணம்,  உன் அம்மா பெயர் கண்ணம்மா என்பதை  பாரதி ஒருமுறை ஹேமாவிடம் சொல்லி இருக்கிறார். அதனால் தனது பெயரை கண்ணம்மா என்று சொல்லாமல் சமையல் அம்மா என்ற பெயரிலே கண்ணம்மா பழகி வந்தார். ஆனால் இந்த வாரத்தில் அந்த உண்மை ஹேமாவுக்கு தெரிய வருகிறது.



    அதாவது வெண்பா கண்ணம்மாவை லாரி ஏற்றி கொள்ள பிளான் செய்ய, கண்ணம்மா மீது லாரி ஏற போவதை சவுந்தர்யாவும் ஹேமாவும் பார்த்து விடுகிறர்கள். அப்போது பதற்றத்தில் ’கண்ணம்மா’ என சவுந்தர்யா உண்மையான பெயரை சொல்லி அழைக்க  ஹேமாவுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. சமையல் அம்மாவின் பெயர் கண்ணம்ம என்ற உண்மை ஹேமாவுக்கு தெரிய வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி