ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் பலன்... பாரதி பாஸ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்!

மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் பலன்... பாரதி பாஸ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்!

பாரதி பாஸ்கர்

பாரதி பாஸ்கர்

பாரதியின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட கசிவை, அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் தனது இயல்பான பேச்சுகளால் மக்களைக் கவர்ந்தவர். கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ முடித்துள்ள இவர் வங்கியில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும், பேச்சின் மீதுள்ள ஆர்வத்தால் தொடர்ந்து பட்டிமன்ற மேடைகளில் பேசி வந்தார். குறிப்பாக பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற மேடைகளில் பாரதியை கட்டாயம் பார்க்க முடியும்.

  அதிலும் பட்டிமன்ற ராஜாவுக்கும், பாரதிக்கும் தான் கடுமையான போட்டி நிலவும். பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா யார் பக்கம் தீர்ப்பளிப்பார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். அந்தளவுக்கு பட்டிமன்ற பேச்சில் பிரபலமாக திகழ்ந்தவர் பாரதி பாஸ்கர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் கடந்த வாரம் அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பாரதியின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட கசிவை, அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

  அந்த முயற்சி வெற்றிகரமாக கை கொடுத்ததைத் தொடர்ந்து, டாக்டர்கள் பாரதி பாஸ்கரின் உடலை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையே அவர் விரைவில் குணமடைய வேண்டி, உலகம் முழுவதும் இருக்கும் பாரதியின் ரசிகர்கள் பிரார்த்தனை நடத்தினார்கள்.

  இந்நிலையில் பாரதி பாஸ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அடுத்தவாரம் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: News On Instagram