Home /News /entertainment /

மருத்துவமனையில் பாரதி பாஸ்கர்.. ஒருசேர பிரார்த்திக்கும் பிரபலங்களும் ரசிகர்களும்!

மருத்துவமனையில் பாரதி பாஸ்கர்.. ஒருசேர பிரார்த்திக்கும் பிரபலங்களும் ரசிகர்களும்!

பாரதி பாஸ்கருக்காக பிரார்திக்கும் பிரபலங்கள்

பாரதி பாஸ்கருக்காக பிரார்திக்கும் பிரபலங்கள்

சற்றும் தாமதிக்காமல் அவரை குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

  சின்னத்திரை ரசிகர்கள் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களை எந்த அளவிற்கு விரும்புகிறார்களோ அந்த அளவிற்கு தமிழர்களின் தனித்துவமான விஷயங்களிலும் மறக்காமல் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

  தமிழர் சிந்தனை கலை வெளிபாட்டு வடிவங்களில் சிறப்பான ஒரு வடிவமாக பட்டிமன்றங்கள் இருந்து வருகின்றன. காலங்கள் மாறினாலும் டிவி-யில் எத்தனையோ புது படங்கள் ஒளிபரப்பப்பட்டாலும் பண்டிகை நாட்களில் நம் இல்லங்கள் தோறும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது பட்டிமன்றம்.

  பல சுவையான மற்றும் சுவாரஸ்யமான தலைப்புகளின் கீழ் நடத்தப்படும் பட்டிமன்றங்கள் ரசிகர்களை கவர எப்போதும் தவறுவதில்லை. கூடவே தமிழகத்தில் இருக்கும் தரமான பட்டிமன்ற பேச்சாளர்களால் நிகழ்ச்சி மேலும் மெருகூட்டப்படுகிறது. பொதுவாக சாலமன் பாப்பையா தலைமையில் நடக்கும் பட்டிமன்றங்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இதில் தவறாது கலந்து கொண்டு சின்னத்திரை மற்றும் பட்டிமன்ற ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் வகையில் மிக நேர்த்தியாக பேச கூடிய மிக சிறந்த பேச்சாளர் பாரதி பாஸ்கர். இவரது பேச்சை கேட்கும் யாரும் ஊக்கம் பெற தவற மாட்டார்கள்.

  அந்த அளவிற்கு அனைத்து வயதினரையும் கவரக்கூடிய வகையில் சிறந்த பேச்சாற்றலை பெற்றவர். அழகு தமிழில் கூர்மையாகவும், ரசிக்கும் படியும் பேசும் மேடை பேச்சாளரான 52 வயதான பாரதி பாஸ்கர், கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ படித்துள்ளார். மேலும் பிரபல முன்னணி தனியார் வங்கி ஒன்றில் மூத்த ஊழியராக முக்கிய பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரபல பட்டிமன்ற பேச்சாளரான பாரதி பாஸ்கருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சென்னையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

  also read பாக்கியலட்சுமி எழில் பற்றி பலருக்கும் தெரியாதவை!

  வழக்கம் போல வேலை முடிந்து வீடு திரும்பிய பாரதி பாஸ்கர், தனக்கு பயங்கரமாக தலைவலிப்பதாக குடும்ப உறுப்பினர்களிடம் கூறி இருக்கிறார். இதனை அடுத்து சற்றும் தாமதிக்காமல் அவரை குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடனே விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாரதி பாஸ்கரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்த போது மூளையில் ரத்தக்கசிவு போன்றதொரு பாதிப்பு காணப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இந்த பாதிப்பை சரி செய்ய பாரதி பாஸ்கருக்கு சிறப்பு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. பாரதி பாஸ்கரின் மூளைக்குச் செல்லும் நரம்புகள் சேதமடைந்திருக்கலாம் என்பதால் அவர் மூளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆரம்பகட்ட அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றன.  இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாரதி பாஸ்கர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள ட்விட்டில், அவரது தமிழைத் தவிர பாரதி பாஸ்கர் சிறப்பான புன்னகைக்கு பெயர் பெற்றவர். உலகிற்கு அவரைப் போன்ற ஒரு அழகான ஆன்மா தேவை. விரைவில் அவர் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Kushbu

  அடுத்த செய்தி