Home /News /entertainment /

டாக்டர் பாரதிக்கு தில்ல பார்த்தீங்களா? மறுபடியும் கண்ணம்மாவை தேடி போயிட்டாரு!

டாக்டர் பாரதிக்கு தில்ல பார்த்தீங்களா? மறுபடியும் கண்ணம்மாவை தேடி போயிட்டாரு!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

இவ்வளவு பிரச்சனைக்கும் பிறகும் மீண்டும் கண்ணம்மாவை தேடி வீட்டுக்கு செல்கிறார் பாரதி. இந்த காட்சிகள் நாளைய எபிசோடில் ஒளிப்பரப்பாகவுள்ளன.

    இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் மீண்டும் கண்ணம்மாவை தேடி அவரின் வீட்டுக்கு செல்கிறார் டாக்டர் பாரதி. மீண்டும் மீண்டும் சீரியல் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறார் இயக்குனர்.

    ஒரு DNA டெஸ்ட் எடுத்தால் முடிய வேண்டிய சீரியலை கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டி கொண்டிருக்கிறார்கள். அதிலும் டாக்டர் பாரதி ரோலை கலாய்த்து தள்ளாதவர்களே இல்லை எனலாம். ஆனாலும் இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் குறைந்த பாடில்லை. இடையில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி விலகிய போது சீரியல் சறுக்கியது. எப்படியோ இயக்குனர் அதை சரி செய்து விட்டார். இப்போது மீண்டும் சீரியல் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லை இடையில் ட்விட்ஸ்ட் என்ற பெயரில் இயக்குனர் மொத்த ரசிகர்க்ளையும் கடுப்பேற்றினார்.

    இதையும் படிங்க.. விஜய் டிவி போட்ட குறும்படம்.. பொய் என அடித்து பேசும் பிக் பாஸ் பாவ்னி!

    அதாவது மீண்டும் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக சேர்வது போல் புரமோ காட்டப்பட்டது. எல்லா பிரச்சனையும் மறந்து மீண்டும் கண்ணம்மாவை ஏற்று கொள்வதாக பாரதி கூறினார். இதற்கு நடுவில் வெண்பா தூக்கில் தூங்குவது போல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்ப்டங்களும் பரவின. இதனால் கூடிய விரைவில் பாரதி கண்ணம்மா சீரியல் முடிய போவதாக ரசிகர்கள் நம்பினர். இதுக் குறித்த ஏகப்பட்ட செய்திகள் இணையத்தில் உலா வந்தன. இவை எல்லாம், பொய் என்பது போல் இயக்குனர் சீரியலில் ஒரு ட்விட்ஸ்ட் வைத்தார்.

    அதாவது, கண்ணம்மா தப்பானவள் என அவரே ஊர் முன்னாடி ஒத்துக் கொள்ள வேண்டும் என பாரதி நிபந்தனை வைத்தார். மொத்த குடும்பமும் ஷாக்கில் நிற்க, கண்ணம்மா கை எடுத்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து சென்றார். இந்த எபிசோடுக்கு பின்பு டாக்டர் பாரதி ரோலை தாய்மார்க்ள் திட்டி தீர்த்தனர். பெரும் ட்விஸ்ட்டை எதிர்பார்த்த ரசிகர்களுக்கும் இது கோபத்தை தந்தது. இந்நிலையில், மீண்டும் கண்ணம்மாவிடம் சவுந்தர்யா சமாதானம் பேசுகிறார். ஆனால் இந்த முறை கண்ணம்மா அதை ஏற்பதாக இல்லை

    இதையும் படிங்க.. ஐஸ்வர்யா சொன்ன ஒரே ஒரு வார்த்தை... தேம்பி தேம்பி அழும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!

    இந்நிலையில் இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் மீண்டும் கண்ணம்மாவை தேடி வீட்டுக்கு செல்கிறார் பாரதி. இந்த காட்சிகள் நாளைய எபிசோடில் ஒளிப்பரப்பாகவுள்ளன. கோர்ட் உத்தரவுக்காக மீண்டும் பாரதி செல்வது போல் கதைக்களம் உள்ளது. மீண்டும் பாரதியை கண்ணம்மா வீட்டுக்குள் சேர்ப்பாரா? அடுத்த என்ன நடக்கும்? என்பது தான் சீரியலில் வரும் வாரத்தில் வர போகும் எபிசோடு.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி