ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெண்பாவை தேடி வந்த மாப்பிள்ளை.. பாரதி கண்ணம்மாவில் அதிரடி திருப்பம்!

வெண்பாவை தேடி வந்த மாப்பிள்ளை.. பாரதி கண்ணம்மாவில் அதிரடி திருப்பம்!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் 9 வருடமாக பாரதியால் DNA டெஸ்ட் பொய் என்ற தகவலை கூட கண்டுப்பிடிக்க முடியவில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில்  பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையை வழக்கம் போல் ஓட வைக்கிறார் வெண்பா.

எப்ப சார் இந்த சீரியலை முடிப்பீங்க? என்று ஒவ்வொரு புரமோவிலும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனாலும் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் இதுப்பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்படி இருக்கையில் சீரியலும் உப்பு சப்பு இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு ட்விஸ்டுடன் பயணித்துக் கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலுக்கு இப்படியொரு நிலைமையா? என கேட்காமல் இருக்க முடியவில்லை. ஒருபக்கம் பாரதிக்கும் - கண்ணம்மாவுக்கு மறுபடியும் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என ஹேமா சொல்கிறார்.

மீண்டும் சீரியலுக்கு கம்பேக் கொடுக்கும் ’திருமதி செல்வம்’ அர்ச்சனா?

இந்த பக்கம் எப்படியாவது வெண்பாவுக்கு முதல் கல்யாணத்தை முடிக்க வேண்டும் என அவரின் அம்மா ஷர்மிளா பாடாய்ப்படுகிறார். ஆனால் வீடு தேடி வரும் மாப்பிள்ளைகளை ஓட வைக்கிறார் வெண்பா. இந்த உண்மை அவரின் அம்மாவுக்கு தெரியாது. இவ்வளவு பிரச்சனைக்கு பின்பும் பாரதியை தான் கல்யாணம் செய்வேன் என அடம்பிடிக்கிறார் வெண்பா. இன்றைய எபிசோடில் பெண் பார்க்க வரும் குடும்பத்தை ஹோட்டலில் சந்திக்கிறார். அவருடன் சாந்தியும் செல்கிறார். இருவரும் மாப்பிள்ளையை ஓட வைக்க பிளான் செய்கின்றனர்.

புகழின் உச்சத்தில் பிக் பாஸ் தாமரை… ஷாப்பிங் போன இடத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்!

தன்னை குடிக்கார பெண் போல் காட்டி கொள்ளும் வெண்பா, மாப்பிள்ளையை அசிங்கமாக திட்டுகிறார். மாப்பிள்ளையின் அம்மா, அப்பா இருவரையும் தகாத வார்த்தையில் பேசுகிறார். அவர்கள் ஷாக்கில் நிற்கின்றனர். வெண்பா பேசுவதை எல்லாம் பார்த்து இந்த பெண்ணே வேண்டாம் என்கின்றனர். வழக்கம் போல் ஷர்மிளா அழைத்து வந்த இந்த மாப்பிள்ளையும் தலை தெறித்து ஓடுகிறார்.


ஒரு குழந்தையாக லட்சுமி தனி ஆளாக நின்று இவ்வளவு உண்மைகளை கண்டுப்பிடித்து இருக்கிறார். ஆனால் 9 வருடமாக பாரதியால் DNA டெஸ்ட் பொய் என்ற தகவலை கூட கண்டுப்பிடிக்க முடியவில்லை. அதற்கான முயற்சி கூட அவர் எடுத்ததில்லை. ஆக மொத்தத்தில் இந்த சீரியலும் இப்போதைக்கு முடிவதாக இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv