குளியல் போட்டோவில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை 'செம ஹாட்’ - ரசிகர்கள் கமெண்ட்

விஜய் டிவி சீரியலில் நடித்து வரும் நடிகை பாக்கிய லட்சுமி தன்னுடைய குளியல் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

  • Share this:
சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்குப் பின்னர் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையான வரவேற்பை சின்னத்திரை பிரபலங்களும் பெற்று வருகின்றனர். ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கின்றனர். பல்வேறு வெர்சன்களின் நச் புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து அப்லோடு செய்கின்றனர். அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் திவ்யா கணேஷ் தன்னுடைய புகைப்படத் தொகுப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.

பாத்டாப், நீச்சல் குளங்களில் எடுத்த புகைப்படம் முதல் மார்டன் டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படங்கள் வரை அதில் இடம்பெற்றுள்ளன. நடிப்பு துறையில் கால் பதிக்கும் முன்பு மாடலிங் துறையில் இருந்த அவர் விதவிதமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

Also Read : சீதையாக நடிக்க பெரும் தொகை கேட்ட கரீனா கபூர்!

ஆனால், அப்போது கிடைக்காத பேரும், புகழும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் நடிப்பதன் மூலம் கிடைத்துள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் இந்த தொடரில், ஜெனிபர் கேரக்டரில் நடித்து வருகிறார். செழியனின் மனைவியாகவும், வீட்டின் மூத்த மருமகளாகவும் உள்ளார். நாடகத்தில் ஹோம்லி பெண்ணாக இருப்பவர், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியில் ரசிகர்களை ஏங்க வைக்கிறார்.அண்மையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட அவர், அதில் கருப்பு நிற சர்ட் ஒன்றை அணிந்திருக்கிறார். மேல் பட்டன்களை கழற்றிவிட்டு, பார்ப்பவர்களை கவர்ச்சியில் திளைக்க வைக்கிறார். அந்த போட்டோவுக்கு ரசிகர்கள் பலர் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்தனர். சீரியலில் உங்கள் கதாப்பாத்திரம் மிகவும் நன்றாக இருக்கிறது. ஹோம்லி கேர்ளாக இருக்கிறீர்கள், ஆனால் சமூகவலைதளங்களில் மிகவும் ஹாட் போட்டோவை பதிவேற்றுகிறீர்கள் ஏன்? என்றெல்லாம் கேட்கத் தொடங்கினர்.இந்த சலசலப்பு அடங்குவதற்குள், நெட்டிசன்கள் வாயை பிளக்கும் அளவுக்கு நீச்சல்குள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், தண்ணீருக்குள் குளித்துக்கொண்டிருக்கும்போது போட்டோ எடுக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு புகைப்படத்தில் பாத்டப்பில் அமர்ந்திருக்கிறார். மேலும் சில புகைப்படங்களில் ட்ரவுசர் அணிந்து கொண்டும், கருப்பு மற்றும் பிரவுன் கலர் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டும் போஸ் கொடுக்கிறார்.

Also Read : ’நிஜ மலர் டீச்சர் அசின் தான்’ - ரகசியம் உடைத்த ‘பிரேமம்’ இயக்குநர்ஜீன்ஸ், டீசர்ட் என விதவிதமான உடையில், பார்ப்பவர்களை சுண்டியிழுக்கும் லுக்கில் புகைப்படங்கள் இருக்கின்றன. ஒரு சில நெட்டிசன்கள் எதிர்மறையான விமர்சனங்கள் வைத்தாலும், பலரும் திவ்யா கணேசனின் புகைப்படங்களுக்கு லைக் கொடுத்துள்ளனர். செம லுக், ஹாட் பிக்சர்ஸ், கவர்ச்சிக் கண்ணி என்றெல்லாம் கமெண்டுகள் பதிவாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த திவ்யா கணேஷன் விரைவில் வெள்ளித் திரையிலும் கால்பதிக்க உள்ளார். படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளதாகவும், அது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவலும் உலா வருகிறது. சீரியலில் ஹோம்லி கேர்ளாக இருப்பதுபோல், வெள்ளித்திரையிலும் இருப்பாரா? அல்லது கவர்ச்சியில் இறங்குவாரா என்றெல்லாம் அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Published by:Vijay R
First published: