மருமகள் ஜெனிக்கு ரோல் மாடலான மாமியார்! எல்லாதுக்கும் பாக்கியா தான் காரணமாம்!

பாக்கியலட்சுமி சீரியல்

செழியன் சம்மத்துடன் ஜெனி வேலைக்கு போக போகிறார்.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி வேலைக்கு போக போகிறார். அதுக்கும் பாக்கியா தான் காரணமாம்.

  பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளை பெரிதும் கவர்ந்த சீரியலாக இருக்க காரணமே அதன் திரையோட்டம் தான். நம் வீடுகளில் உள்ள அம்மாக்களின் பிரதிபலிப்பாகவே சீரியலின் கதையுள்ளது. பாக்கியாவை தங்களை போல் எண்ணி இல்லத்தரசிகள் சீரியலை பார்க்கின்றனர். ஒட்டு மொத்த தூண்களாக குடும்பத்தை தாங்கி நிற்கும் குடும்ப தலைவிகளின் நிலை என்ன என்பது தான் பாக்கியலட்சுமி சீரியலின் ஒன்லைன் ஸ்டோரி. பல்வேறு அவமானங்கள், பிரச்சனைகளுக்கு பிறகு பாக்கியா தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். சொந்தமாக மசாலா பொடி பிசினஸ், சமையல் ஆர்டர்களை எடுத்து சமைத்து கொடுக்கிறார். அதுக்கு இளைய மகன் எழில் பக்கபலமாக இருக்கிறான்.

  அதே போல் தான் ஜெனியும். பாக்கியாவின் மனசுக்கு ஏற்றார் போல் நல்ல மருமகள். தனது மாமியாருக்கு எல்லா விதத்திலும் பக்க பலமாக இருக்கிறாள். பாவம் சமைக்க மட்டும் தான் வராது. அப்பா கோபியைப் போலவே மூத்த மகன் செழியன். மனைவிக்கு மரியாதை என்ற பேச்சுக்கே இடமில்லை. பாக்கியாவுக்கு ஜெனி உதவுவது கூட செழியனுக்கு பிடிக்காது. இந்த நேரத்தில் தான் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொள்ள போகிறார் ஜெனி. அதுவும் செழியன் சம்மத்துடன். ஜெனி வேலைக்கு போக போகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த சந்தோஷமான விஷயத்தை ஜெனி, பாக்கியா மற்றும் மொத்த குடும்பத்தினரிடம் கூறுகிறார். அதுமட்டுமில்லை பாக்கியாவிடம் “நீங்க தான் ஆண்டி என் ரோல் மாடல். வீட்டு வேலையும் செஞ்சிகிட்டு உங்களுக்கு தனியா ஒரு பிசினஸ் பண்றீங்க. பாக்கியலட்சுமி அப்படின்னு உங்க பேருக்கு பின்னாடி ஒரு அங்கீகாரம் இருக்கு. அது மாறி நானும் மாறனோம்ன்னு நினைக்கிறேன்’  என்று சொல்கிறாள். இதை கேட்டு பாக்கியாவுக்கு ரொம்ப சந்தோஷம் ஆகிடுது.  வீட்டில இருக்குற எல்லாரிடமும் விஷயத்தை சொல்லிட்டு செழியன் கூட ஆஃபிஸ்க்குகு கிளம்புகிறாள் ஜெனி. இதுவரை ஜெனியிடம் முகம் கூட கொடுத்து பேசாத செழியன், அன்போடு ஜெனியை ஆஃபிஸூக்கு அழைத்து செல்கிறான்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: