Home /News /entertainment /

கோபிக்கும் ராதிகாவுக்கும் கல்யாணமா? பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

கோபிக்கும் ராதிகாவுக்கும் கல்யாணமா? பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி கோபி - ராதிகா

பாக்கியலட்சுமி கோபி - ராதிகா

ராதிகாவை திருமணம் செய்து கொள்ள தற்கொலை முயற்சி வரை செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாக்கியலட்சுமி சீரியலில் வீட்டை விட்டு வெளியே போன கோபிக்கு ராதிகாவுடன் அடுத்து திருமணம் நடக்க போவது போல் ட்விஸ்ட் வரபோவதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

    பாக்கியலட்சுமி சீரியலில் ஒவ்வொரு எபிசோடும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது,. இன்றைய எபிசோடின் படி கோபி வீட்டை விட்டு வெளியேறி விட்டார். பாக்கியா 40 லட்சத்தை தருகிறேன் எனவும் சபதம் போடுகிறார். இப்போது இருக்க இடமில்லாமல் நடுத்தெருவுக்கு சென்ற கோபி அடுத்து ராதிகாவை தான் சந்திக்க செல்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படி இருக்கையில் அடுத்து ராதிகாவை திருமணம் செய்து கொள்ள தற்கொலை முயற்சி வரை செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பெண்களை பாடி ஷேமிங் செய்பவர்களுக்கு பாடம் எடுக்க போகும் ரஜினி பட நாயகி!

    ஏற்கெனவே கோபி பற்றிய எல்லா உண்மையும் தெரிந்த பின்பு ராதிகா அவரை வெறுத்து விட்டார்.. கோபியிடம் பேசுவதையும் நிறுத்து விட்டார். ஆனால் ராதிகாவின் அம்மா, அண்ணன் ராதிகாவை கோபிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைக்கின்றனர். பாக்கியாவுக்கும் கோபிக்கும் விவாகரத்து கிடைத்து விட்டது என்று தெரிந்ததும் அவர்கள் ராதிகாவின் மனசை மாற்ற தொடங்கி விட்டார்கள். இப்படி இருக்கையில் கோபி வீட்டை விட்டு வெளியே வந்ததும் ராதிகாவுக்காக தான். இப்படி இருக்கையில் அவர் ராதிகாவை சந்தித்து பேசி திருமணம் பற்றி வற்புறுத்துவார் என தெரிகிறது.

    ராதிகாவால் ரோட்டுக்கு வந்த கோபி.. பாக்கியலட்சுமியில் அடுத்த பரபரப்பு!

    ராதிகா அதற்கு சம்மதிக்காத போது தற்கொலை வரை சென்று அவரை ஏமாற்றி மனசை மாற்ற முயற்சி செய்வார் எனவும் இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன. அதுமட்டுமில்லை பாக்கியாவை ஜெயிக்க விடாமல் செய்ய கோபி பல சதிகளை இனி செய்வார் எனவும் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி