• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • சூப்பர் சிங்கர் சீசன் 8-ல் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு பென்னி தயால் கொடுத்த சர்ப்ரைஸ்!

சூப்பர் சிங்கர் சீசன் 8-ல் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு பென்னி தயால் கொடுத்த சர்ப்ரைஸ்!

பென்னி தயால்

பென்னி தயால்

வைலட் கார்டு ரவுண்ட் மூலம் ஸ்ரீதர் சேனா, மானஸி ஆகிய இருவரும் சூப்பர் சிங்கர் 8-ன் இருந்து சுற்றுக்குள் சென்றனர். இறுதியாக அனைவரும் மிகவும் எதிர்பார்த்தபடி ஸ்ரீதர் சேனா சூப்பர் சிங்கர் சீசன் 8-ன் வெற்றியாளராக வாகை சூடினார்.

 • Share this:
  தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் அனைத்து வயதினராலும் விரும்பி பார்க்கப்பட்டு வரும் ஷோவாக இருப்பது சூப்பர் சிங்கர். பெரிய அளவிலான பேக்ரவுண்ட் ஏதுமின்றி தங்களது திறமையால் இந்த போட்டிக்கு தேர்வாகும் போட்டியாளர்கள், தங்களது அற்புத குரல் மற்றும் பாடும் திறன் மூலம் மக்களை கவர்ந்து பிரபலமடைவதால் உலக தமிழர்கள் மத்தியில் சூப்பர் சிங்கருக்கு அமோக ஆதரவு இருந்து வருகிறது.

  கடந்த 2006-ல் துவங்கிய சூப்பர் சிங்கர் ஷோ, கடந்த வாரம் தனது 8-வது சீசனை வெற்றிகரமாக நிறைவு செய்து ரசிகர்களை வழக்கம் போல குஷிப்படுத்தியது. இந்த ஆண்டின் துவக்கத்தில் துவக்கப்பட்ட சூப்பர் சிங்கர் சீசன் 8 ஷோவானது கொரோனா காரணமாக சில வாரங்கள் நிறுத்தப்பட்டது. நிலைமை சீரானதால் விலக்கி கொள்ளப்பட லாக்டவுன் காரணமாக மீண்டும் துவக்கப்பட்டது. அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், பென்னி தயால் மற்றும் கல்பனா ராகவேந்தர் ஆகியோர் நடந்து முடிந்த சமீபத்திய சீசனில் நடுவர்களாக இருந்தனர்.

  மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் ஷோவை தொகுத்து வழங்கினர். ரேஷ்மா ஷியாம், பாலாஜி ஸ்ரீ, கானா சுதாகர், அபிலாஷ், பரத், அனு ஆனந்த், மானசி, முத்து சிற்பி, அய்யனார், ஆதித்யா, ஸ்ரீதர் சேனா, அரவிந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றாலும் இறுதி போட்டிக்குள் அனு, பரத், முத்து சிற்பி, அபிலாஷ் ஆகியோர் நேரடியாக நுழைந்தனர்.  வைலட் கார்டு ரவுண்ட் மூலம் ஸ்ரீதர் சேனா, மானஸி ஆகிய இருவரும் சூப்பர் சிங்கர் 8-ன் இருந்து சுற்றுக்குள் சென்றனர். இறுதியாக அனைவரும் மிகவும் எதிர்பார்த்தபடி ஸ்ரீதர் சேனா சூப்பர் சிங்கர் சீசன் 8-ன் வெற்றியாளராக வாகை சூடினார். பிரபல இசைமைப்பாளர் மற்றும் பாடகரான அனிருத் கையால் வெற்றி கோப்பையையும்,ரூ.10 லட்சம் பரிசையும் பெற்றார் ஸ்ரீதர் சேனா. பரத் இரண்டாம் இடமும், அபிலாஷ் மூன்றாம் இடமும் பிடித்தனர். சூப்பர் சிங்கர் 8-ல் வெற்றி பெறுபவர் அனிருத் இசையமைக்க போகும் பாடலுடன், வெள்ளித்திரையில் பின்னணிப் பாடகராக அறிமுகமாகும் வாய்ப்பை பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இதன்படி அனிருத் இசையில் ஸ்ரீதர் சேனா விரைவில் பின்னணி பாடகராக அறிமுகமாவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சூப்பர் சிங்கரின் ஃபைனல்ஸிற்கு பிறகு இந்த சீசனில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும், நடுவர்களில் ஒருவரான பென்னி தயால் ஒரு சர்ப்ரைஸ் இரவு விருந்து கொடுத்து அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

  Also read... ’படங்கள் தோல்வி, சொத்துகளை இழந்தேன்’ - ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மறுப்பக்கம்!

  இந்த சர்ப்ரைஸ் டின்னர் தொடர்பான ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சூப்பர் சிங்கரில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரும் தங்களது சோஷியல் மீடியாக்களில் ஸ்டோரியாக மற்றும் போஸ்ட்டாக ஷேர் செய்து இருக்கிறார்கள். இவை தற்போது வைரலாகி வருகின்றன. டின்னருடன் ஒரு டிஜே பார்ட்டியும் நடைபெற்று உள்ளது. பென்னி தயாலின் சர்ப்ரைஸ் டின்னர் மற்றும் பார்ட்டி பங்கேற்ற அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையே சூப்பர் சிங்கர் பரத் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், வேற லெவல் டின்னர் சார் என்று பென்னி தயாலுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vinothini Aandisamy
  First published: