• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • BB5 tamil : பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்... இரு அணிகளாக பிரிந்த ஹவுஸ்மேட்ஸ்!

BB5 tamil : பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்... இரு அணிகளாக பிரிந்த ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

வழக்கம் போல் டாஸ்கில் இரு அணிகளுக்கும் இடையே வாய் தகராறு ஏற்படுகிறது.

  • Share this:
    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.

    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீசனில் சுவாரசியம் ரொம்ப ரொம்ப குறைவு என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. கன்டெண்ட் தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நமிதா மாரிமுத்து தானாகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து முதல் அதிகாரப்பூர்வமான எலிமினேஷனில் மலேசியாவில் இருந்து பங்கேற்ற நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். அதற்கு அடுத்து, அனைவருக்குமே ஷாக்கிங் எலிமினேஷன் ஆக நிகழ்ந்தது இரண்டாவதாக வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜாவின் எலிமினேஷன். முதல் ஆளாக சின்னப்பொண்ணு வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் சின்ன பொண்ணு மூன்றாவது நபராக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

    இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபினய், இசைவாணி, சுருதி, பாவ்னி, சிபி, அக்ஷரா, ஐக்கி மற்றும் நிரூப் ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார் இந்த வாரம் எலிமினேஷன் ஆகப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. பிக்பாஸ் தொடங்கி நான்கு வாரங்கள் முடிந்த நிலையிலும் அபினய் இருப்பதே தெரியவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. கடந்த வார இறுதி எபிசோட்களிலும் கமல்ஹாசன் இதை சுட்டிக்காட்டினார். இந்நிலையில், இந்த வாரம் அபினய் எலிமினேட் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்றைய தினம் தீபாவளி கொண்டாட்டங்கள் பிக் பாஸ் வீட்டில் களைக்கட்டினர். கொண்டாட்டம் முடிந்த உடனே, பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுப்பத்தில் இறங்கிவிட்டார். இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் தலைவர் டாஸ்குக்கான போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் வழங்கப்படுகிறது. ‘செண்பகமே செண்பகமே’ என்ற டாஸ்கில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து பால் கறக்கு பணியில் ஈடுப்படுகின்றனர்.



    வழக்கம் போல் டாஸ்கில் இரு அணிகளுக்கும் இடையே வாய் தகராறு ஏற்படுகிறது. டாஸ்கில் சிறப்பான பங்களிப்பு அளித்தவர்கள் என்ற வரிசையில் 2 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த வாரம் நடக்கும் தலைவர் போட்டிக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: