• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • BB5 tamil : பிக் பாஸூக்கு போன பிரியங்காவுக்கு ஜால்ரா பட்டம்.. நிரூப்பை வைத்து கமெண்டுகள் வேற!

BB5 tamil : பிக் பாஸூக்கு போன பிரியங்காவுக்கு ஜால்ரா பட்டம்.. நிரூப்பை வைத்து கமெண்டுகள் வேற!

பிக் பாஸ் பிரியங்கா

பிக் பாஸ் பிரியங்கா

bb5 tamil 5 Day 43 review priyanka vs iykki berry: : தாமரைக்கு ஜால்ராவுக்கு அர்த்தமே தெரியாதாம், ஆனால் நிரூப் - பிரியங்கா உறவின் அர்த்தம் தெரியணுமாம்.

  • Share this:
    பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்காவுக்கு ஐக்கி பெர்ரி, ஜால்ரா பட்டம் தந்துள்ளார். அதுமட்டுமில்லை நிரூப் -பிரியங்காவின் ஃபிரண்ட்ஷிப் ஹவுஸ்மேட்ஸ்களால் கேள்விக்கு ஆளாகியுள்ளது.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் வேப்பிலை அடித்த பின்பு ஹவுஸ்மேட்ஸ் முகத்தில் அப்படியொரு தெளிவு. 43 ஆவது நாள் பாடலுன் தொடங்கியது. வருண் தரையில் படுத்து உடம்பை உருட்டி கொண்டிருந்தார். அக்‌ஷராவுக்கு டான்ஸ் ஆட தெரியாத உண்மையையே நேற்று தான் தெரிந்தது. தாமரை சொல்லவே வேண்டாம். ஒருவழியாக பாடல் நிறுத்தப்பட வருணின் ஆட்டம் தொடங்கியது. இந்த வாரம் நீர் சக்தி வாரம். வருண் நீர் காயினை கைப்பற்றியதால் பாத்ரூமில் ஆளுமை தரப்பட்டது. வழக்கம் போல் வருணின் பேச்சை ஹவுஸ்மேட்ஸ் கேட்க வேண்டும், டாஸ்க்குகள் கொடுக்கப்படும். அதே போல் வருண் காயினை எடுத்து விட்டால் குழாய்களில் தண்ணீர் நிறுத்தப்படும்.

    இந்த விதிமுறைகளை வருண் வாசிக்க, ஹவுஸ்மேட்ஸ் கைத்தட்டி சிரித்தனர். டாஸ் தொடங்கியது. முதல் ஆடாக சிக்கியது பிரியங்கா தான். பிரியங்கா ஷவரில் குளிக்க, வருண் காயினை எடுக்க தண்ணீர் நின்றது. பிரியங்கா சாபமா விட, கிச்சனில் தாமரை சிங்கை கழுவி கொண்டிருந்தார். தண்ணீர் நின்றது, சிபியிடம் தாமரை சொல்லியதாக சொல், காயினை வைக்க சொல் என தூது அனுப்பினார். யாரா இருந்தாலும் ஒரே சட்டம் தான். முடியாது என பதில் கொடுத்தார் வருண். (அசிங்கப்பட்டார் தாமரை)

    அடுத்த சில மணி நேரத்தில் பிக் பாஸ் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி தொடங்கியது. சிபி, பிரியங்கா, ஐக்கி பெர்ரி, நிரூப் கலந்து கொண்டனர். யாருடைய தண்ணீர் சாயத்தால் அதிகம் கலங்காமல் இருக்கிறதோ அவரே கலங்கம் இல்லாத இந்த வார தலைவர் என க் வைத்து ஒரு டாஸ்கை நடத்தினார் பிக் பாஸ். போட்டி தொடங்குவதற்கு முன்பே யார் யார் ,யாருக்கு கலரை ஊற்றுவார்கள் என நம்மால் கணிக்க முடிந்தது. அது அப்படியே தான் நடந்தது. பிரியங்காவுக்கும் அண்ணாச்சிக்கும் வழக்கம் போல் முட்டிக் கொண்டது. நிரூப்பும் பிரியங்காவும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். சிபிக்கு தெரிந்து விட்டது இது பிரியங்கா வெர்சஸ் நிரூப் தான் என்று, தேவையில்லாமல் ஏன் பேசிக் கொண்டு என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்தார்.

    இதில் விஷ பாட்டில் அக்‌ஷரா ஒரு ரீசனும் கேட்காமல் நேராக சென்று சிபியின் பவுலில் கலர் ஊற்றினார். இதில் இருந்தே தெரிந்து இருக்கும் யார் பகையை மனதில் வைத்து கொண்டே பயணிப்பது என்று. அண்ணாச்சியும் பாசாங்கு காட்டி கடைசியில் பிரியங்காவின் பவுலில் ஊற்றினார். இதில் ஐக்கி பெர்ரியின் மாற்றம் தான் கவனிக்க வேண்டிய ஒன்று. பிக் பாஸ் அவார்ட்ஸ் ஷோவில் அபிஷேக் சொன்னதை கேட்ட காரணத்தினால் முதல் 2 வாரத்தின் அடிப்படையில் பிரியங்காவுக்கு ஜால்ரா பட்டம் தருகிறேன் என்றார். கமல்ஹாசன் முன்னாடியும் அதை தான் வழி மொழிந்தார் ஐக்கி. ஆனால் தலைவர் போட்டியில் பிரிய்ங்காவை ஜால்ரா, ஜால்ரா , ஜால்ரா என தொடர்ந்து பதிவு செய்தார். இதற்கு நடுவில் தாமரை வேற , ஜால்ராவுக்கு அர்த்தமே தெரியாதாம், ஆனால் நிரூப் - பிரியங்கா உறவின் அர்த்தம் தெரியணுமாம். பாயிண்ட்டாக பேசுவதாக நினைத்து தாமரை ஏதோ ஏதோ உலற, அதற்கு கைத்தட்டல்கள் வேற. ஆனால் அதற்கு பொறுமையாக தாமரைக்கு புரியும் படி பிரியங்கா சொன்ன விளக்கம் பிரமாதம். தம்பியாக, அண்ணனாக, நண்பனாக நிரூப் எனக்கு இந்த வீட்டில் கிடைத்த நல்ல உறவு என்றார்.

    அதே போல் கைத்தட்டி ரசித்த அக்‌ஷரா, அண்ணாச்சி, வருணுக்கும் நச் பதில் கொடுத்தார். (வருண் , அக்‌ஷரா நெருக்கத்தின் அர்த்தத்தை தாமரை கேட்டு சொன்னா நல்லா இருக்கும்). கடைசியில் பிரியங்கா இந்த வார பிக் பாஸ் தலைவரானார். அண்ணாச்சிக்கு, ஐக்கிக்கும் துளி அளவும் சந்தோஷம் இல்லை. கிச்சன் டீம், கிளீன் டீம்மை பிரியங்கா பிரிக்க, ரேஷனை கவனிக்க அபிநவ் மற்றும் இசையை நியமித்தார். இசை வேண்டாம் என கொளுத்தி போட்டார் அண்ணாச்சி. அதற்கு அவர் சொன்ன காரணம் வேலிடாக இருந்தது. ஆனால் இடையில் தாமரை மூக்கை நீட்ட, நெருப்பு ஆற்றல் வாரத்தில் நடந்ததை பற்றி பேச, இசைக்கும் தாமரைக்கும் சண்டை முட்டியது. தாமரை ஏய், நீ, வா என பேச இசைவாணி முதன்முதலாக சவுண்டு விட்டார். ஆடிப்போனார் தாமரை. இதுவரை இசை கத்தி ஹவுஸ்மேட்ஸ் இப்படி பார்த்ததில்லை. ஆத்தாடி ஆத்தி அண்னாச்சி முகத்தில் அப்படியொரு பதற்றம். தாமரைக்கு நாம் கத்தி பேசிவிட்டால் எல்லோரும் அடங்கி விடுவார்கள் என நெனப்பு, ஸ்ருதி, பாவனியிடம் அப்படி தான் செய்வார். ஆனால் இசையிடம் அது நடக்கவில்லை.

    அடுத்தது, இந்த வார எவிக்‌ஷனுக்கான நாமினேஷன். தலைவர் டாஸ்கில் ஓவராக பேசிய காரணத்தினால் 6 ஓட்டுகளை பெற்று ஐக்கி பெர்ரி நாமினேஷ் செய்யப்பட்டார். தாமரைக்கு நாமினேஷன் என்றவுடன் சிபி மட்டுமே கண்ணில் படுகிறார் போல. வழக்கம் போல் அக்‌ஷரா, சிபி, பாவனி, இசை, நிரூப், அபிநவ், அண்ணாச்சி ஆகியோர் நாமினேஷனில் இடம் பெற்றனர்.  3 வாரங்களுக்கு பின்பு எவிக்‌ஷன் லிஸ்டில் வந்ததால் உடனே வீட்டுக்கு போறேன் நான்னு நாடகத்தை ஆரம்பித்தார் நாடக கலைஞர் தாமரை.  ஆனால் யாரும் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இசையிடம் சிபி, அண்ணாசி, ராஜூ நிரூப் ஆகியோர் தாமரையிடம் பேசியது பற்றி கருத்து கேட்டுக் கொண்டிருந்தனர். இசையின் தரப்பிலும் நியாயம் இருந்தது போல் தெரிந்தது. தாமரை கேமரா முன்னாடி ஒருமாதிரி பேசுவதும், பிறகு அர்த்தம் புரியாமல் சொல்லி விட்டேன் என எஸ் ஆவதும் கடுப்பான விஷயம் தான். பிரியங்கா தலைவரான முதல் நாளே சண்டையில் முடிந்தது பிக் பாஸ் வீடு.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: