பிக் பாஸ் சீசன் 5 வீட்டில் கன்டெண்ட் தலைவியாக உருவெடுத்து எல்லா புரமோவிலும் இடம் பெறுகிறார் தாமரை செல்வி.
விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5, 25 நாட்களை கடந்த பின்பு தற்போது தான் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற அடுத்த 2 வாரத்தில் நடந்த எவிக்ஷனில் அபிஷேக் ராஜா மற்றும் நாடியா சாங் ஆகியோர் வெளியேறினர்.
குறிப்பாக அபிஷேக்கின் வெளியேற்றத்திற்கு பிறகு பிக் பாஸ் வீட்டில் கன்டெண்டுக்கு தட்டுபாடு ஏற்பட்டது. சொல்லப்போனால் நிறைய ரசிகர்கள் நிகழ்ச்சி போர் அடிப்பதாக கூறி பார்ப்பதை நிறுத்திவிட்டனர். இந்நிலையில் தான் பிக் பாஸ் வீட்டில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சண்டை நடந்து கொண்டிருக்கிறது. 5 ஆற்றலை குறிக்கும் வகையில் கொடுக்கப்பட்ட டாஸ்கில் தாமரை செல்வியின் காற்று காயினை ஸ்ருதி எடுத்தது தான் இவ்வளவு அக்கபோருக்கு காரணம். தாமரைக்கு ஸ்ருதி மீது வெறுப்பு இருக்கிறது. அது டாஸ்க் வரை செல்வது தான் சண்டைக்கு அடித்தளம் ஆகிறது.
நேற்று தொடங்கிய பட்டிமன்றம் டாஸ்கில் தாமரை, பிரியங்கா மற்றும் ஸ்ருதி ஆடை குறித்து வைத்த விமர்சனம் பிக் பாஸ் வீட்டில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்காக பொங்கிய சிபியும் தாமரையை நீங்கள் அடக்கமாக இருக்கீங்களா? என கேட்டு வாயை அடக்கினார். இந்நிலையில் இன்றைய புரமோவிலும்
ஸ்ருதி vs தாமரை செல்வி சண்டை நீள்கிறது. நகரத்து அணியில் இருக்கும் பிரியங்கா தங்களிடம் 4 காயின்கள் இருப்பதாக பேச, இதனால் தாமரைக்கு மண்டை சூடாகி சண்டை போட தொடங்குகிறார். ஸ்ருதியும் அவருக்கு பதில் சொல்லும் வகையில் கருத்துக்களை பதிவு செய்ய ,
பிக் பாஸ் பற்ற வைத்த பட்டிமன்ற நெருப்பால் பற்றி எரிகிறது பிக் பாஸ் 5 வீடு.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.