• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • BB5 promo: பேச வேண்டியது நிறைய இருக்கு... பஞ்சாயத்தை கூட்டும் கமல்ஹாசன்!

BB5 promo: பேச வேண்டியது நிறைய இருக்கு... பஞ்சாயத்தை கூட்டும் கமல்ஹாசன்!

பிக் பாஸ் 5 புரமோ

பிக் பாஸ் 5 புரமோ

இந்த வாரத்தின் மிகப் பெரிய பிரச்சனையான ஸ்ருதி vs தாமரை நாணய சர்ச்சையை பற்றி கமல் பேசுவார்.

  • Share this:
    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 இந்த மாத தொடக்கத்தில் தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை வீட்டில் இருந்து 3 போட்டியாளரகள் வெளியேறியுள்ளனர். அதில் சினிமா பையன் அபிஷேக் மற்றும் நாடியா சாங் மட்டுமே ரசிகர்களின் ஒட்டு வங்கியை வைத்து முறையாக வெளியேற்றப்பட்டவர்கள். நமீதா மாரிமுத்து கதை என்னவென்று இதுவரை யாருக்கும் தெரியாது.

    தற்போது பிக் பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர் .மூன்றாவது எவிக்‌ஷன் இந்த வாரம் நடைபெறவுள்ளது. தற்போது எவிக்‌ஷன் லிஸ்டில் நெருப்பு தலைவி இசை, பாவனி, வருண், இமான் அண்ணாச்சி, அபினவ், பிரியங்கா, சின்ன பொண்ணு, அக்‌ஷரா , ஸ்ருதி ஆகியோர் உள்ளனர். எனவே இதில் யாரேனும் ஒருவர் வெளியேற வாய்ப்பு உள்ளது. அதே சமயம் தற்போது எவிக்‌ஷன் முடிவை மாற்றி அமைக்கும் சக்தி கொண்ட நாணயங்கள், ஸ்ருதி, பாவனி, வருண், இசையிடம் உள்ளது. ஒருவேளை இவர்களில் யாரேனும் வீட்டை விட்டு வெளியேற நினைத்தால் அதை மாற்றும் சக்தி இவர்களிடம் உள்ளது.

    அன்றே கணித்தார் பிரியங்கா.. வெளி வரும் தாமரையின் உண்மை முகம்!

    கடந்த இரண்டு வாரங்களாக எலிமினேஷனில் இருந்து தப்பித்து வரும் சின்ன பொண்ணு தான் இந்த வாரம் வெளியேறப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.அதே போல் இந்த சீசன் தொடங்கி நான்கு வாரங்கள் முடியும் நிலையில், அபினய் கிட்டத்தட்ட எதுவுமே செய்வதில்லை. முந்தைய பிக் பாஸ் சீசனின் ரமேஷ் போல தான் அபினய் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். இந்த பேச்சுக்களுக்கான முடிவு நாளை (ஞாயிறு) தெரிந்துவிடும்.



    இந்நிலையில் இன்றைய தினத்திற்கான முதல் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வாரத்தின் மிகப் பெரிய பிரச்சனையான ஸ்ருதி vs தாமரை நாணய சர்ச்சையை பற்றி கமல் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை குறிக்கும் வகையில் புரமோவில் கமல்ஹாசனும் இன்று பேச வேண்டியது ஏகப்பட்டது இருக்கு பஞ்சாயத்தை கூட்டுவோம் என்கிறார். இதனால் இன்றைய எபிசோடு குறித்து எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: