ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் அல்டிமேட்டில் பாலாஜி முருகதாஸ் செய்த காரியம்... ஆதாரத்தை வெளியிட்ட சனம் ஷெட்டி!

பிக் பாஸ் அல்டிமேட்டில் பாலாஜி முருகதாஸ் செய்த காரியம்... ஆதாரத்தை வெளியிட்ட சனம் ஷெட்டி!

பிக் பாஸ் பாலாஜி

பிக் பாஸ் பாலாஜி

பிக் பாஸ் சீசன் 4-ன் போது சனம் ஷெட்டி அழகி போட்டியில் வெற்றி பெற சில அட்ஜெஸ்ட்மென்ட்களை செய்துள்ளார் என்று பாலாஜி கூறியதாக பெரும் சர்ச்சை வெடித்தது நினைவிருக்கலாம்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  சின்னத்திரை ரசிகர்கள் மிகவும் ஆவலாக விரும்பி பார்க்கும் ரியாலிட்டி ஷோவாக இருத்து வருகிறது பிக்பாஸ். ஸ்டார் விஜய் டிவி-யில் கடந்த 2017-ல் துவங்கி இதுவரை வெற்றிகரமாக 5 சீசன்களை நிறைவு செய்துள்ளது பிக்பாஸ். கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த தமிழகத்தின் மிக பெரிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸை உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். தற்போது பிக்பாஸின் OTT வெர்ஷனான "பிக்பாஸ் அல்ட்டிமேட்" டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.

  இந்த பிக்பாஸ் வெர்ஷனிலும் சர்ச்சைகள் மற்றும் சண்டைகளுக்கு பஞ்சமில்லை. புதிய போட்டியாளர்கள் யாரையும் களமிறக்காமல் ஏற்கனவே 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் தான் பிக்பாஸ் அல்ட்டிமேட்டில் பங்கேற்று உள்ளார்கள். வனிதா விஜயகுமார், நிரூப், ஜூலி, அபிராமி வெங்கடாசலம், தாமரை செல்வி, நடிகர் தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், நடிகை சுஜா வருணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக், அபிநய், சுருதி, கவிஞர் சினேகன் உள்ளிட்ட 14 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் அல்ட்டிமேட் துவங்கியது. முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி, அடுத்த வாரம் சுஜா வருணி, மூன்றாவது வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் ஷாரிக் மற்றும் அபிநய் ஆகியோர் எலிமினேட் ஆகி இருக்கிறார்கள்.

  இதையும் படிங்க.. பிக் பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்கும் சிம்பு… வைல்ட் கார்டு எண்ட்ரி இந்த நடிகையா?

  ஒப்பு கொண்ட திரைப்பட வேலைகள் பாதியிலேயே நிற்பதாக கூறி சீசன் 6-ல் கண்டிப்பாக சந்திக்கலாம் என்று தெரிவித்து விட்டு நடிகர் கமல் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தார். வரும் வாரம் முதல்  நடிகர் சிம்பு பிக்பாஸ் ஷோவை தொகுத்து வழங்க போவதாக தெரிகிறது. இந்த சூழலில் நடிகை வனிதா விஜயகுமார் திடீரென்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

  இதையும் படிங்க.. தாமரையுடன் பேசினாரா சிவகார்த்திகேயன்? பிக் பாஸ் அல்டிமேட்டில் தெரிய வரும் அடுத்தடுத்த உண்மைகள்!

  இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் அல்ட்டிமேட்டில் உங்கள் வாழ்கையை மாற்றிய தேவதை யார்.? பேய் யார்.? என் வெளிப்படையாக கூற வேண்டும் என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதில் தன்னுடன் பிக்பாஸ் சீசன் 4-ல் பங்கேற்ற சனம் ஷெட்டி தான் என் வாழ்க்கையில் demon-ஆக வந்தார். நான் சொல்லாத ஒன்றை சொல்லியதாக கூறி என்னை பெண்களுக்கு எதிரானவன் போல சித்தரித்து எனக்கு மிகவும் கெட்ட பெயரை வாங்கி தந்து விட்டார் என்று பாலாஜி முருகதாஸ் கூறினார். முன்னதாக பிக் பாஸ் சீசன் 4-ன் போது சனம் ஷெட்டி அழகி போட்டியில் வெற்றி பெற சில அட்ஜெஸ்ட்மென்ட்களை செய்துள்ளார் என்று பாலாஜி கூறியதாக பெரும் சர்ச்சை வெடித்தது நினைவிருக்கலாம். இந்த விஷயத்தையே தற்போது மீண்டும் நினைவு கூர்ந்து சனம் ஷெட்டியை ஒரு பேய் என்கிற ரீதியில் குற்றம்சாட்டி பேசி இருக்கிறார் பாலாஜி முருகதாஸ்.

  இதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ள சனம் ஷெட்டி, எனக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி. சில போட்டியாளர்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி இருக்கிறார்கள். அதற்கு பதில் அளித்தால் அவர்களின் கேம் பாதிக்கும் என்பதால் நான் இதுவரை எதிர்வினையாற்றவில்லை. ஆனால் இப்போது என் நேர்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டு உள்ளது. என்ன நடந்தது என்பதற்கான ஆதாரம் இதோ என கூறி வீடியோ கிளிப் ஒன்றை ஷேர் செய்திருக்கிறார். சனம் ஷேர் செய்த வீடியோவில் சீசன் 4 வின்னரான ஆரியும், சுரேஷ் சக்கரவர்த்தியும் பாலாஜி முருகதாஸ் சனம் ஷெட்டி குறித்து பேசியதை பற்றி விவாதிக்கும் காட்சிகள் அடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Balaji murugadoss, Bigg Boss Tamil, Vijay tv