ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

BB ultimate : யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற விஜய் டிவி பிரபலம்!

BB ultimate : யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற விஜய் டிவி பிரபலம்!

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்

BB ultimate biggboss : சுரேஷ் தாத்தாவின் வெளி நடப்புக்கு பின்பு யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்டாக தீனா உள்ளே வந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை அதன் போட்டியாளர்கள் தான் மிகப்பெரிய அட்ராக்ஷனாக இருந்து வருகிறார்கள். அதனாலயே பிக் பாஸ் குழு பார்த்து பார்த்து மெனகெட்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் இதுவரையில் சீசன் 1 லிருந்து சினேகன், சுஜா, மற்றும் ஜூலி, சீசன் 2 லிருந்து ஷாரிக் மற்றும் தாடி பாலாஜி, சீசன் 3 ல் இருந்து அபிராமி மற்றும் வனிதா விஜயகுமார், சீசன் 4 லிருந்து பாலாஜி முருகதாஸ், அனிதா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் இறுதியாக சமீபத்தில் முடிந்த சீசன் 5 ல் இருந்து நான்கு போட்டியாளர்கள் தாமரை, நிரூப், சுருதி மற்றும் அபிநய் ஆகியோர் போட்டியாளராகக் கலந்து கொண்டனர்.

இதுவரை சுரேஷ், சுஜா, அபிநய், ஷாரிக் , தாடி பாலாஜி, சினேகன், அனிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர். வனிதா விஜயகுமார் தானாகவே வாக்-அவுட் ஆகிவிட்டார். மற்றொரு வைல்டு கார்டாக KPY சதீஷும், மறுபடியும் சுரேஷ் சக்கரவர்த்தியும் உள்ளே வந்தனர். இதில் நேற்று முன் தினம் உடல் நல பிரச்சனை காரணமாக சுரேஷ் தாத்தா வாக் அவுட் செய்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

Pension Plan | மாதம் ரூ. 50,000க்கு மேல் பென்சன் கிடைக்கும் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இதற்கு முன்பு வைல்டு கார்டாக யார் வருவார் என்ற கேள்விக்கு பார்வையாளர்கள் தங்களின் விருப்பமான போட்டியாளர்கள் பெயரைக் கூறினார்கள். அதில், பலரும் ஓவியா மற்றும் ஷெரின் ஆகியவர்களைக் குறிப்பிட்டார்கள். அதே போல் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் லாஸ்லியா வைல்டு கார்டு என்ரியாக வர போவதாகவும் ஏகப்பட்ட தகவல்கள் இணையத்தில் உலா வந்தன. ஆனால் சுரேஷ் தாத்தாவின் வெளி நடப்புக்கு பின்பு யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்டாக தீனா உள்ளே வந்துள்ளார்.நேற்றைய தினம் தீனாவின் என் ட்ரி ஒளிப்பரப்பானது. இவருக்கும் சதீஷூக்குமான காம்போ வெற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன. வந்த முதல் நாளே தீனா பஞ்சுகளை அள்ளி வீசினார். போக போக இன்னும் பல டைமிங், ரைமிங்குகளை எதிர்பார்க்கலாம்.

' isDesktop="true" id="721377" youtubeid="D8mwoMkzMT0" category="television">

மொத்தத்தில் பிக் பாஸ் வைல்டு கார்டு என் ட்ரியாக தீனா வந்திருப்பது அவருக்கு மட்டுமில்லை இந்த நிகழ்ச்சிக்கே கூடுதல் பிளஸ் தான்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv