Home /News /entertainment /

BB ultimate: வைல்டு கார்டு என்ட்ரியா வரும் நடிகை.. ரசிகர்களுக்கு இப்போதே ஆர்வம் தாங்கல!

BB ultimate: வைல்டு கார்டு என்ட்ரியா வரும் நடிகை.. ரசிகர்களுக்கு இப்போதே ஆர்வம் தாங்கல!

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்

'பிக் பாஸ் அல்டிமேட்' என்ற பெயர் கொண்ட இந்த நிகழ்ச்சி பல பழைய பிக் பாஸ் பிரபலங்களை கொண்டு ஆரம்பிக்க பட்டுள்ளது.

  மக்களுக்கு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பார்ப்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு இருப்பதால் மக்கள் இது போன்ற நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கின்றனர். பல வகையான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போதும் அதிக ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் டி.ஆர்.பி எப்போதும் இதற்கு உயர்வாகவே இருக்கும். சில வாரங்களுக்கு முன்பு தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவு பெற்றது. இது பலரின் வரவேற்பை பெற்று இருந்தது. இதில் மக்கள் எதிர்பார்த்தபடி ராஜு தான் வெற்றியாளரானார்.

  இந்நிலையில் தற்போது மீண்டுமொரு புது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடங்கினர். 'பிக் பாஸ் அல்டிமேட்' என்ற பெயர் கொண்ட இந்த நிகழ்ச்சி பல பழைய பிக் பாஸ் பிரபலங்களை கொண்டு ஆரம்பிக்க பட்டுள்ளது. எனவே புதிய பரிமாணத்தில் அடுத்த அத்தியாயத்தை இதன் மூலம் தொடங்கி உள்ளனர். இந்த நிகழ்ச்சியை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

  இந்த நிகழ்ச்சி பற்றிய புரோமோ மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. அதே போன்று இதில் எந்தெந்த பிரபலங்கள் வர போகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதிலேயே பலர் ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி, ஜூலி, அபிராமி, வனிதா, நிரூப், சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், சுஜா வருணி ஆகிய 14 பேர் முக்கிய பிக் பாஸ் கண்டெஸ்டெண்ட் கலந்து கொண்டுள்ளனர்.

  இதையும் படிங்க.. 6 மாசம் தான்பா ஆகுது… சோகத்தில் சினேகன் மனைவி கன்னிகா!

  இது ஆரம்பித்த சில நாட்களிலேயே பல சர்ச்சைகளையும், சண்டைகளையும் உருவாக்கி உள்ளது. அபிராமி புகைபிடித்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக இருக்க, மற்றுமொரு செய்தி புதிதாக வெளியாகி உள்ளது. தற்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் வைல்ட் கார்டு என்ட்ரீயாக மக்களின் மனதை கவர்ந்த ஓவியா வர போவதாக கூறப்படுகிறது. இவர் முன்னதாக பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்போது முதலே ஓவியா என்றால் மக்களின் மனதில் தனி இடம் உருவானது.

  இதையும் படிங்க.. இனி சீரியல்களில் என்னை பார்க்க முடியாது... ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை சொன்ன பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ!

  ஓவியா வரப்போகிற செய்தியை அறிந்து கொண்ட மக்கள் குஷியில் உள்ளனர். அதே போன்று ஓவியா ஆர்மியை பற்றி சொல்ல வேண்டுமா என்ன, அவர்கள் மற்றவர்களை விடவும் ஆனந்தத்தில் திளைத்துள்ளனர். இவர் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பம்பத்திலே வருவதாக இருந்தது. ஆனால், அவருக்கு கொரோனா பாசிட்டீவ் வந்ததால் தற்போது தான் வைல்ட்டு கார்டு என்ட்ரீயாக உள்ளே நுழைகிறார். இனி பிக் பாஸ் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கி விடும் என்பதில் கொஞ்ச கூட சந்தேகமே இல்லை. அதே போன்று பல வித காதல் கதைகள் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் உருவாகலாம். அனைத்தையும் பொறுத்திருந்து பார்ப்போம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Vijay tv

  அடுத்த செய்தி