விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் பல விதவிதமான ஷோக்களை விட பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி 2017ம் ஆண்டு தொடங்கி 2022 வரை வெற்றிகரமாக 5 சீசன்களை நிறைவு செய்துள்ளது. ஒரே வீடு, 16 போட்டியாளர்கள், அதே சண்டை, சச்சரவு என வழக்கமான டெம்லேட்டாக இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 வரை வெற்றிகரமாக ஓட, இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று, பிக்பாஸ் வீட்டுக்குள் ஒலிக்கும் அந்த கணீர் குரல், மற்றொன்று உலக நாயகன் கமல் ஹாசன்
தற்போது டி.வி.யில் இருந்து டிஜிட்டல் வெர்ஷனுக்கு தாவியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் “பிக்பாஸ் அல்டிமேட்” என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. 24*7 என்ற நேரலை நிகழ்ச்சியாக ‘
பிக்பாஸ் அல்டிமேட்’ ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. தொடர்ந்து பார்க்க முடியாதவர்களுக்காக விறுவிறுப்பான காட்சிகளை மட்டுமே கொண்ட பிக்பாஸ் அல்டிமேட் ஷோ தினந்தோறும் இரவு ஒன்பது மணிக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப்பில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதையும் படிங்க.. சன் டிவி ரோஜா சீரியல், ரேட்டிங்கில் தேசியளவில் உச்சம் தொட்டதா? வாயடைத்த சின்னத்திரை..
தமிழில் பிக்பாஸ் ஐந்து சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி குறித்த அறிமுகத்தின் போது கூட “பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எனக்கு பிடித்தமான ஒன்று, இது அடுத்தகட்டமாக ஓடிடிக்கு மாறும் போது நான் அதில் ஒருவனாக பயணிப்பதில் பெருமையடைகிறேன்” என்றெல்லாம் பேசியிருந்தார்.
கிட்டத்தட்ட 60 நாட்கள் நடக்கும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. நான்கு வாரங்கள் நெருங்கும் நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். விக்ரம் படத்தில் நடித்து வரும் கமல் ஹாசன், அதற்காக ஒதுக்கப்பட்ட தேதிகளை, பிக்பாஸ் அல்டிமேட் ஷூட்டிங்கிற்காக மாற்ற வேண்டியுள்ளதால் இப்படியொரு முடிவெடுத்ததாகவும், பிக்பாஸ் சீசன் 6-ல் சந்திக்கலாம் எனக்கூறி ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார்.
உலக நாயகன் இல்லாமல்
பிக்பாஸா? அந்த அளவுக்கு ஆளுமையுடன் அடுத்து யார் வந்து இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் படி, ஸ்ருதி ஹாசன், சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி என பல பிரபலங்களிடமும் விஜய் டி.வி. நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க.. தாமரையுடன் பேசினாரா சிவகார்த்திகேயன்? பிக் பாஸ் அல்டிமேட்டில் தெரிய வரும் அடுத்தடுத்த உண்மைகள்!
சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சிலம்பரசனை ஒப்பந்தம் செய்த விஜய் டி.வி. நிர்வாகம், அதற்கான அசத்தல் புரோமோ வீடியோ ஒன்றையும் நேற்று வெளியிட்டிருந்தது. ஒயிட் கலர் கோட் சூட்டில் செம்ம ஸ்டைலிஷ் ப்ளஸ் ஹேண்ட்ஸம் லுக்கில் வந்து சிம்பு கலக்கினார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சிம்பு ஒருநாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஏற்கனவே 4 வாரங்களை கடந்துவிட்டது, இன்னும் 5 வாரங்கள் மட்டுமே உள்ளன. அதிலும் சிம்பு தொகுத்து வழங்கப்போவது வாரத்தில் ஒருநாள் மட்டுமே, அந்த ஒருநாளைக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் 5 நாட்களுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.