• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தாடி பாலாஜி தந்தைக்கு உதவிய நடிகர் விஜய்... பல ஆண்டுகளுக்கு பின்பு தெரிய வந்த உண்மை!

தாடி பாலாஜி தந்தைக்கு உதவிய நடிகர் விஜய்... பல ஆண்டுகளுக்கு பின்பு தெரிய வந்த உண்மை!

தாடி பாலாஜி தந்தைக்கு உதவிய விஜய்

தாடி பாலாஜி தந்தைக்கு உதவிய விஜய்

பாலாஜிக்கு சொல்லாமலே 1 லட்சம் ரூபாயை மருத்துவமனையில் கட்டி பாலாஜியின் தந்தையின் மருத்துவ செலவுக்கு உதவி இருக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன்பு தாடி பாலாஜிக்கு உதவிய நெகிழ்வான சம்பவத்தை பாலாஜி விஜய் டிவி பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.


    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தங்களது நடன திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்தே பாலாஜி - நிஷா ஜோடி நடுவர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக இருந்து வருகிறது. இவர்களை விட வயதில் குறைவான போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்தாலும் பாலாஜி - நிஷா ஜோடி தங்களது முழு முயற்சியையும் கொட்டி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கோலிவுட் ரவுண்ட். ஏற்கெனவே வெள்ளித்திரையில் ரீலிஸ் ஆகி கொண்டாட்டப்பட்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து மீண்டும் மேடையில் நடனத்தால் காட்சிப்படுத்த வேண்டும். இந்த ரவுண்டில் தாடி பாலாஜியும் நிஷாவும் கில்லி படத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

    இதுக்குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தாடி பாலாஜி மிகவும் நெக்ழ்ச்சியாக நடிகர் விஜய் குறித்த பல தகவல்களை ஷேர் செய்துள்ளார். தாடி பாலாஜியிடம் நிகழ்ச்சியின் ஆங்கர் ஈரோடு மகேஷ், ஏன் கில்லி படத்தை தேர்வு செய்தீர்கள்? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் கூறும் பாலாஜி, அவருக்கும் நடிகர் விஜய்-க்குமான சந்திப்பு பற்றி கூறுகிறார். விஜய்யின் ஆரம்பகால படங்களான நிலாவே வா, பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும் படங்களில் விஜய்யின் நண்பராக தாடி பாலாஜியும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 8 வருடங்களாக விஜய்யுடன் பயணித்துள்ளாராம். ஷூட்டிங் முடிந்த பின்பும் அவருடனே இருப்பாராம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்த நேரத்தில் தான் ஒருமுறை தாடி பாலாஜி அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் ஆகி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பாலாஜி விஜய்யுடன் ஷூட்டிங்கில் தான் இருந்து இருக்கிறார். பாலாஜி டென்ஷனாக இருப்பதை நோட் பண்ண விஜய், அவருக்கே தெரியாமல் தனது உதவியாளர் மூலம் என்ன பிரச்சனை என்ன விசாரித்து இருக்கிறார். பிறகு பாலாஜிக்கு சொல்லாமலே 1 லட்சம் ரூபாயை மருத்துவமனையில் கட்டி பாலாஜியின் தந்தையின் மருத்துவ செலவுக்கு உதவி இருக்கிறார்.


    இந்த சம்பவத்தை மிகவும் நெகிழ்ச்சியாக கண்ணீருடன் பாலாஜி பிபி ஜோடிகளில் பகிர்ந்துள்ளார். இந்த புரமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சனிக்கிழமை நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும் போது தாடி பாலாஜி பகிர்ந்த இந்த சம்பவம் குறித்த முழு காட்சிகளையும் ரசிகர்கள் பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: