Home /News /entertainment /

விஜய் டிவியில் நடிகை ஸ்ரீப்ரியா.. பல வருட ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்!

விஜய் டிவியில் நடிகை ஸ்ரீப்ரியா.. பல வருட ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்!

ஸ்ரீப்ரியா

ஸ்ரீப்ரியா

இந்த புரமோவை பார்த்த அனைவரும் ஸ்ரீப்ரியா மனதில் இருந்து பேசுகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கிறார் நடிகை ஸ்ரீப்ரியா.

    பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 ஃபைனல்ஸை நெருங்கி வருகிறது. 10 ஜோடிகளுடன் தொடங்கிய இந்த பயணம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் செலப்ரேஷன் சுற்று. போட்டியாளர்கள் ஒவ்வொரு வகையான  செலப்ரேஷனையும்  கண்முன் நிறுத்தவுள்ளனர். இந்த சீசனில் அமீர் - பாவ்னி, சுஜா - சிவா ஜோடிகளுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறும் வாய்ப்பு இந்த 2 ஜோடிகளில் ஒருவருக்கு உள்ளது என ஏற்கெனவே இணையத்தில் ரசிகர்கள் சண்டை போட தொடங்கி விட்டனர்.

    ரூ. 2 லட்சம் கொடுத்து பிரம்மாண்ட பிரிட்ஜ் வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!

    ஒவ்வொரு சுற்றிலும் அமீர் - பாவ்னி, சுஜா - சிவா எதாவது ஒரு மேஜிக்கை மேடையில் நிகழ்த்தி நடுவர்கள், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றனர். இந்நிலையில் இந்த வார எபிசோடில் ரசிகர்களுக்கு மற்றொரு சர்ப்ரைஸூம் உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் முகம் காட்டுகிறார் நடிகை ஸ்ரீப்ரியா. 80களில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்கும் தொடர்ந்து ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீப்ரியா இயக்கம், தயாரிப்பு என பிஸியாகி விட்டார். இப்போது அரசியலிலும் தனது பங்களிப்பை தந்து வருகிறார்.



    அண்மையில் தான் இவரின் மகளுக்கு லண்டனில் திருமணம் நடைப்பெற்று முடிந்தது. இந்நிலையில் பிபி ஜோடிகளில் போட்டியாளராக இருக்கும் சிவா, சிவாஜி குடும்பத்தின் பேரன் ஆவார். ஆனால் பல காரணங்களால் அவருக்கு முழு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்த ஆதங்கத்தை ஸ்ரீப்ரியா மேடையில் கொட்டி தீர்க்கிறார்.

    யார் உதவியும் இன்றி தானாகவே வாய்ப்புகள் தேடி அலைந்து ஒவ்வொரு முயற்சியும் செய்வான். இப்ப அவனுக்கு அம்மா இல்லை என கண்கலங்கி ஸ்ரீப்ரியா அழுகிறார். உடனே மைக்கை வாங்கி பேசும் சிவா, எனக்கு 2 அம்மா என ஸ்ரீப்ரியாவை நெகிழ வைக்கிறார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் ஸ்ரீப்ரியாவுக்கு சிவா புகைப்படம் ஒன்றையும் பரிசாக வழங்குகிறார்.

    இந்த புரமோவை பார்த்த அனைவரும் ஸ்ரீப்ரியா மனதில் இருந்து பேசுகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Actress Sri priya, Vijay tv

    அடுத்த செய்தி