Home /News /entertainment /

இந்த வாரம் பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் அப்படியொரு விஷயம் நடக்க போகுது!

இந்த வாரம் பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் அப்படியொரு விஷயம் நடக்க போகுது!

பிபி ஜோடிகள்

பிபி ஜோடிகள்

இதற்கான அதிகாரப்பூர்வ புரமோ விஜய் டிவியின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.

    பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக வருகிறார் உலகநாயகன் கமல்ஹாசன். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

    விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும் அதில் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிப்பரப்பாக தொடங்கும் அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் பிபி ஜோடிகள் சீசன் 2 மேம் 8ஆம் தேதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒளிப்பரப்பாகி வருகிறது. பிக் பாஸ் இதுவரை 5 சீசன்கள் முடிந்த நிலையில் அடுத்தாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் எக்ஸ்க்ளுசிவ் நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது. அதுவும் வெற்றியடைந்தது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து தான் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    மீண்டும் சீரியலுக்கு கம்பேக் கொடுக்கும் ’திருமதி செல்வம்’ அர்ச்சனா?

    கடந்த ஆண்டு  பிபி ஜோடிகள் முதல் சீசன் ஒளிப்பரப்பானது. இதில் ஷாரிக் - அனிதா ஜோடி முதல் இடத்தை பிடித்தனர். நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக தலைமை தாங்கினர். இதன் தொடர்ச்சியாக தற்போது பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடுவராக என்ட்ரி கொடுத்துள்ளார். அவருடன் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இந்த முறை நடுவர் அவதாரம் எடுத்துள்ளார்.

    புகழின் உச்சத்தில் பிக் பாஸ் தாமரை… ஷாப்பிங் போன இடத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்!

    இந்த பிபி ஜோடிகள் சீசன் 2வில் இசைவாணி- வேல்முருகன், ஜக்கி - தேவ், அபிஷேக்- சுருதி, அமீர் - பாவ்னி, ஹாரதி -கணேஷ், சுஜா- சிவகுமார், தாமரை - பார்த்தசாரதி, மற்றும் இவர்களுடன் டேனியலும் இணைந்துள்ளார். இந்த பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5'இல் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் மற்ற சீசன்களிலும் கலந்து கொண்ட சிலரும் உள்ளனர். இந்த வாரம் ஒளிப்பரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil TV Express (@tamiltvexpresss)






    விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக இந்த வாரம் பிபி ஜோடிகளில் நடிகர் கமல்ஹாசன் வருகை தருகிறார். அதுமட்டுமில்லை ஜோடிகளின் நடனத்தை பார்த்து அதற்கு கமெண்டும் தருகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ புரமோ விஜய் டிவியின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது. ஆனால் அதற்குள் இந்த தகவல் இணையத்தில் வைரலாக தொடங்கிவிட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Vijay tv

    அடுத்த செய்தி