ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 புரோமோ.. யார் யாருடைய ஜோடின்னு தெரியுமா.?

பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 புரோமோ.. யார் யாருடைய ஜோடின்னு தெரியுமா.?

BB Jodigal 2

BB Jodigal 2

BB Jodigal 2 | பிக் பாஸ் போட்டியாளர்களை ஜோடிகளாக மாற்றி பிபி ஜோடி என்கிற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை தொடங்கினார்கள். இது மிகவும் சுவாரஸ்யமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது. கடந்த பிக் பாஸ் சீசன் 5 முடிந்த பிறகு தற்போது பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும் அதில் ஒருசில மட்டும் மிகவும் வைரலாக கூடிய நிகழ்ச்சியாக மாறி விடும். அந்த வகையில் பிக் பாஸ் ஷோவிற்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல சீசன்களை கடந்து மக்களின் பேராதரவோடு ஒவ்வொரு சீசனிலும் பல திருப்பங்களோடு வெற்றி நடைபோட்டு வந்தது. குறிப்பாக அடுத்த எபிசோடில் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு இந்த ஷோ அதிக ஆர்வம் கொண்டதாக இருக்கும்.

அதே போல தினசரி பிக் பாஸ்  நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் உண்டு. சிறப்பாக போட்டியிடும் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் ஆர்மிகள் உருவாகியும் வந்தன. பொழுதுபோக்கு அதிகம் நிறைந்த ரியாலிட்டி நிகழ்ச்சி என்பதால் பலர் பிக் பாஸ் ஷோவை விரும்பி பார்ப்பார்கள். இதுவரை 5 சீசன்கள் முடிந்த நிலையில் அடுத்தாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் எக்ஸ்க்ளுசிவ் நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது. ஒவ்வொரு முறையும் இந்நிகழ்ச்சி முடிந்த உடன் அதில் உள்ள பிரபலங்களை கொண்டு அடுத்து ஒரு புதிய நிகழ்ச்சியை தொடங்கி விடுவார்கள்.

அந்த வகையில் பிக் பாஸ் போட்டியாளர்களை ஜோடிகளாக மாற்றி பிபி ஜோடி என்கிற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை தொடங்கினார்கள். இது மிகவும் சுவாரஸ்யமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது. கடந்த பிக் பாஸ் சீசன் 5 முடிந்த பிறகு தற்போது பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதை நிரூபிக்கும் விதமாக தற்போது பிபி ஜோடிகள் சீசன் 2 புரோமோவும் ரிலீசாகி உள்ளது. இதை பலரும் பார்த்து ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

' isDesktop="true" id="739669" youtubeid="jSp5ogBa_Y0" category="television">

இந்த புரோமோவில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் உள்ள பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பிரியங்கா - ராஜு, இசைவாணி- வேல்முருகன், ஜக்கி - தேவ், அபிஷேக்- சுருதி, அமீர் - பாவ்னி, ஹாரதி -கணேஷ், சுஜா- சிவகுமார், தாமரை - பார்த்தசாரதி, மற்றும் இவர்களுடன் டேனியும் இணைந்துள்ளார். இந்த பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5'இல் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் மற்ற சீசன்களிலும் கலந்து கொண்ட சிலரும் உள்ளனர்.

Also Read : மைக்கை வீசிய பார்த்திபன், அதிர்ச்சியான ஏ.ஆர்.ரஹ்மான்...  என்ன நடந்தது.?

இந்த நிகழ்ச்சி மே 8 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாக உள்ளதாக கூறியுள்ளனர். அதன்படி இனி ஞாயிறுதோறும் இரவு 7.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சி குறித்து பலரும் ஆவலாக காத்திருக்கின்றனர். குறிப்பாக பிக் பாஸ் ரசிகர்கள் இந்த ஷோவிற்காக வெயிட்டிங்கில் உள்ளனர். இந்த புரோமோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை யூடியூபில் பகிர்ந்து வருகின்றனர். அதில் பலரும் அமீர் மற்றும் பாவ்னி ஜோடி பற்றி குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் ஜோடி பொருத்தம் சிறப்பாக உள்ளதாகவும் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

Published by:Selvi M
First published:

Tags: Bigg Boss Tamil, Entertainment, Vijay tv