• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரசிகர்களை சிரிக்க வைக்கிற நிஷாவுக்கு இப்படியொரு நிலைமையா? காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி!

ரசிகர்களை சிரிக்க வைக்கிற நிஷாவுக்கு இப்படியொரு நிலைமையா? காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி!

பிபி ஜோடிகள் புரமோ

பிபி ஜோடிகள் புரமோ

நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த நிஷா பல்வேறு கருத்துக்களை எதிர்கொண்டார்

  • Share this:
    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு எல்லோரும் என்னை அவாயிட் செய்தனர் என கண்கலங்கி பேசியுள்ள புரமோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் ‘அறந்தாங்கி’ நிஷா. பெண்களுக்கு காமெடி சாத்தியமாகுமா என்கிற கேள்வியை உடைத்துச் சாதித்திருக்கிறார். பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தை உடைத்தவர்.கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் நிஷாவுக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து பிக் பாஸ் கடந்த சீசனில் கலந்துகொண்டார்.

    அதுவரை தமிழ் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட நிஷா, பிக் பாஸில் பாசமலர் போல் இருந்தது பலரையும் வெறுக்க வைத்தது. ரியோ மற்றும் அர்ச்சனா அன்பு கேங்கில் நிஷா இருந்ததால் அவரின் மொத்த திறமையும் வெளிவரவில்லை எனவும் கருத்துக்கள் அடிப்பட்டன.கிட்டத்தட்ட 13 ஆண்டு காலம் பட்டிமன்ற பேச்சாளராக இருந்த நிஷா பிக் பாஸ் வீட்டில் அந்த திறமையை காட்சிப்படுத்தவில்லை எனவும் ஒருமுறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த நிஷா பல்வேறு கருத்துக்களை எதிர்கொண்டார் இருப்பினும் தைரியமாக விஜய் டிவியில் பல நிகழ்ச்சியில் முகம் காட்டத்தொடங்கினார். இப்போது பிபி ஜோடிகாள்,கலக்கல் ராஜா கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

    also read.. பாரதி கண்ணம்மா ‘அகிலன்’ பெர்சனல் பக்கம்

    இந்நிலையில், விஜய் டிவியில் வீக் எண்டில் ஒளிப்பரப்பாகும் பிபி ஜோடிகள் புரமோ வெளியாகியுள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் பன்ச் கேம் விளையாடிகிறார்கள். இந்த விளையாட்டு விஜய் டிவியில் புதியதல்ல. தன்னைப்பற்றி பரவும் நெகடிவ் விமர்சனங்களை சொல்லி அதை பன்ச் செய்கிறேன் என்பார்கள்.



    அந்த வகையில் இந்த பன்ச் கேமில் கலந்துகொள்ளும் பிபி ஜோடி போட்டியாளர்கள் பல்வேறு விமர்சனங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அதில் அறந்தாங்கி நிஷா கூறுகையில் “ பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு நெருக்கமானவர்களே என்னை அவாயிட் செய்தனர். நான் ஒரு லூசு மாறி சுத்திட்டு இருந்தேன் . என்னைப்பத்தி ஏகப்பட்ட நெகடிவ் கிண்டல்கள்” என கூறி பஞ்ச் செய்கிறார். இந்த புரமோ ரசிகர்களை சற்று யோசிக்க வைத்துள்ளது. பிறரை சிரிக்க வைத்த நிஷாவுக்கே இந்த நிலைமையா? பாவம் எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: