Home /News /entertainment /

BB elimination : எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பிக் பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியே போவது இவரா?

BB elimination : எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பிக் பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியே போவது இவரா?

பிக் பாஸ்  எலிமினேஷன்

பிக் பாஸ் எலிமினேஷன்

BB elimination today : இந்த வார நாமினேஷனில் பாலா, ஜூலி, சினேகன் மற்றும் சுருதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது யார்? என்ற தகவல் காட்டுத்தீ போல் இணையத்தில் பரவி வருகிறது.

    ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பார்ப்பது என்பது பலருக்கும் மிகவும் பிடித்தமான விஷயமாகும். பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு இருப்பதால் பிக் பாஸ் ஷோ மக்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியாக மாறிவிட்டது. இதனால் மற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை கட்டிலும் பிக் பாஸ் ஷோவின் டி.ஆர்.பி எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

    கடந்த ஜனவரி மாதம் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிந்த நிலையில், 'பிக் பாஸ் அல்டிமேட்' என்கிற புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ரியாலிட்டி ஷோ வழக்கம் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாவதற்கு பதிலாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது.அதே போல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர்கள் வித்யாசமாக புரமோ மூலம் அறிவிக்கப்பட்டன. சினேகன், அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், சுருதி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி, ஜூலி, அபிராமி, தாமரை செல்வி, ஷாரிக், சுஜா வருணி, நிரூப் ஆகிய 14 பேர் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க.. Fixed Deposit திட்டத்தில் இனி எக்ஸ்ட்ரா வட்டி கிடைக்க போகுது.. எஸ்பிஐ சூப்பர் அப்டேட்!

    வழக்கம் போல ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்ற வேண்டும் என்கிற நிலையில், முதல் வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறினார். அடுத்த வாரம் சுஜா, 3 வது வாரம் டபுள் எவிக்‌ஷனாக அபிநய் மற்றும் ஷாரிக் வெளியேறினர். அதன்பின்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசனே நேரமின்மை காரணமாக நிகழ்ச்சிக்கு பாய் சொல்லிவிட்டு கிளம்பினார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

    இதையும் படிங்க.. அரசு ஊழியர்களுக்கு மட்டும் ரூ.8 லட்சம் வரை தர்றோம்.. அறிவிப்பு வெளியிட்ட பிரபல வங்கி!

    கடந்த வார எபிசோடில் போட்டியாளர்களின் தவறுகளை பயங்கரமாக சுட்டிக்காட்டி ரைடு விட்டார். அதே போல் கடந்த வாரம் தாடி பாலாஜி போட்டியில் இருந்து வெளியேறினார். இந்த வார நாமினேஷனில் பாலா, ஜூலி, சினேகன் மற்றும் சுருதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
    இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சினேகன் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இதுவரை அவருக்கு தான் குறைவான வாக்குகள் வந்துள்ளது என்பதால், இந்த வாரம் எவிக்ஷனில் சினேகன் வெளியேற வாய்ப்புள்ளது. இருப்பினும் இது குறித்த உண்மையான தகவல்கள் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி